இந்தியா

பா.ஜ.க தலைவர்கள் “ஜெயிக்கவிட்டால் கட்சியிலிருந்து விலகுவார்களா?”: பிரசாந்த் கிஷோர் மீண்டும் சவால்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்கத்தை கூட தாண்டாது என சவால்  விடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சவால் விடுத்துள்ளார்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர்.

மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும்  நிலையில்  இந்த முறை மேற்கு வங்கத்தை பாஜக பிடிப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல எம்.பி எம்.எல்.ஏக்கள் தன் கட்சியில் இணைத்து வருகிறது பாஜக.

திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்துள்ளார் அக்கட்சியின் முக்கிய தலைவர் சுபேந்து  அதிகாரி ஒருவர். இவர் ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர்  பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற்று முதல்வர் “மம்தா பானர்ஜி” ஆட்சி நடத்தி வருகிறார்.

ALSO READ  10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரின் வருகையின் காரணமாக பல தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது என திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் “மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை கடப்பது  சாத்தியமே இல்லை, இந்த ட்விட்டை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் பாஜக இரட்டை இலக்கத்தை கடந்தால் நான் ட்விட்டரை  விட்டு விலகி விடுகிறேன்” என கூறியிருந்தார்.

ALSO READ  பவானிபூர் இடைத்தேர்தல்- மம்தா பானர்ஜி வெற்றி

அதனையடுத்து  தற்போது மீண்டும்  ஒரு சவாலை பா.ஜ.க.வுக்கு விடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், “மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்னுடைய கணிப்பின்படி 100 தொகுதிகளுக்கும் குறைவாகத்தான் பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும். ஒருவேளை 200 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. ஜெயிக்காவிட்டால், அந்தக் கட்சியின் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவார்களா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதனை தொடர்ந்து இந்நிகழ்வு தற்போது மேற்கு வங்க அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புகைப்படக்கலையில் அதிக ஈடுபாடு காரணமாக கேமரா வடிவத்தில் வீடு கட்டிய புகைப்படக் கலைஞர்… 

naveen santhakumar

களைப்பால் தண்டவாளத்தில் உறக்கம்; புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சரக்கு ரயில்…

naveen santhakumar

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika