இந்தியா

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.

புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் பெரும்பான்மையை காங்கிரஸ் அரசு இழந்தது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.  அதனையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி. இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. 

அதனையடுத்து ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில்,புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்து கடிதம் எழுதினார். அதனை ஏற்ற மத்திய அமைச்சரவை தற்போது புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.


Share
ALSO READ  Compañía De Apuestas Deportivas On-line 1xbet ᐉ 1xbet Co
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா! 

News Editor

15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்த தோனி

Admin

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை – அக்டோபரில் உச்சம் பெறலாம் – நிபுணர்குழு எச்சரிக்கை

naveen santhakumar