இந்தியா

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .


இந்நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால்  மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். 

இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்களில் இருந்து, மற்ற மாநிலங்களுக்கு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ALSO READ  இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !

இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு- கோலம் வரைந்து போராட்டம் நடத்திய மாணவிகள் கைது

Admin

Названы самые популярные соцсети в Казахстане ᐈ новость от 13:56, 05 декабря 2023 на zakon k

Shobika

கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில்களில் A/C பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது நிறுத்தம்- ரயில்வே உத்தரவு….

naveen santhakumar