இந்தியா

புதுச்சேரியில் மாஸ்க் அணியவில்லை என்றால் அபராதம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், மதம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும், மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வில்லை என்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்க இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ  அபாரதத்திற்கு பதில் முத்தம் அளித்த பெண்..!

#Corona #Coronavirus #TamilisaiSowtharajan #Tamilnadu #Pudhucherry #wearmask #covid19


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்! இளைஞர் கைது..

Shanthi

புல்லட் ரயில் திட்டம் போல் ஹைப்பர் லூப் திட்டமும் கைவிடப்படுகிறதா- அஜித் பவார்

Admin

முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர், போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… 

naveen santhakumar