இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; புதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ  புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்

அதனையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.

புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் பெரும்பான்மையை காங்கிரஸ் அரசு இழந்தது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.  அதனையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி. இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

ALSO READ  வடகொரியாவுக்கு உதவிய இந்தியா... 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு மாரடைப்பு:

naveen santhakumar

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படம் இணையதளத்தில் வெளியீடு

News Editor

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்..

Shanthi