இந்தியா

மற்ற மாநிலங்களை போல புதுச்சேரி மக்களும் கஷ்டப்படக்கூடாது-ஆளுநர் தமிழிசை 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இளைஞர்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தடைந்த மாற்றுத்திறன் சைக்கிள் பயணிகளை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, கொரோனா 2-வது அலை இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்றும், எனவே இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். 

ALSO READ  தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

மேலும் சனி மற்றும் ஞாயிறு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு  அளித்ததற்கு நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்த அவர், சில மாநிலங்களில் படுக்கை வசதி இன்றி, ஆக்சிஜன் இன்றி மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்றும், அப்படிபட்ட சூழ்நிலை மக்களுக்கு வரக்கூடாது என்பதால் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஆக்சிஜன், ரெம்டெசிவர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், மருந்து தட்டுப்பாடு என சில அரசியல் தலைவர்கள் அறிக்கை கொடுப்பதாகவும், பொதுமக்களுக்கு அச்சத்தை தவிர்த்து தைரியத்தை அரசியல் கட்சியினர் கொடுங்கள் என கோரிக்கை வைத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு ஹோட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி… 

naveen santhakumar

1xbet Türkiye Casino İncelemesi Bilgilendirici Ve Yardımcı

Shobika

உடனடியாக சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் இந்தியா எச்சரிக்கை…

naveen santhakumar