இந்தியா

4 குடும்பங்களுக்காக மசூதி கட்டித்தர முடிவெடுத்த கிராம மக்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி ஒன்றைக் கட்ட கிராம மக்கள் முன்வந்துள்ளனர்.

Secularism At Best: Sikhs And Hindus Renovate 59-Year-Old Mosque For Single  Muslim Family In Punjab Village

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே உள்ள பூலர் கிராமத்தில் ஏழு குருத்வாராக்கள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன, ஆனால் மசூதி இல்லை.

இங்கு 1947 பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தான் செல்லாத நான்கு முஸ்லீம் குடும்பங்கள் உள்ளன. இந்த 4 குடும்பங்களுக்காக ஒரு மசூதியைக் கட்ட இக்கிராமத்தினர் தானாக முன்வந்துள்ளனர். இதற்காக ரூ .100 முதல் ரூ .1 லட்சம் வரை மசூதி கட்ட அனைத்து கிராம மக்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

ALSO READ  இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !

இதனைத் தொடர்ந்து மசூதி கட்டுவதற்கான நாட்டு விழாவில் அனைத்து சமூகத்தினரும் எந்தவிதமான வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அக்கிராம தலைவர் பாலா சிங் (45) கூறுகையில்,

1947 இல் பிரிவினைக்கு முன்னர் இங்கு ஒரு மசூதி இருந்தது, ஆனால் காலப்போக்கில் அது இடிந்து விழுந்தது. கிராமத்தில் நான்கு முஸ்லீம் குடும்பங்கள் உள்ளன, அவர்கள் பிரிவினையின் போது அங்கு செல்லாமல் எங்களுடனே இருந்தவர்கள்.

ALSO READ  தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு: கனடா அதிரடி… 

எங்கள் கிராமத்தில் எந்த வேறுபாடு இன்றி இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய குடும்பங்கள் இணக்கமாக வாழ்கின்றன என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவர்னரிடம் ஸ்டாலின் அளித்த 97 பக்கம் கொண்ட ஊழல் புகார் :

naveen santhakumar

உ.பி.: விகாஷ் துபே என்கவுண்ட்- போலீஸ் அதிகாரிகளுக்கு மாலை அணிவித்த கான்பூர் மக்கள்… 

naveen santhakumar

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப்

naveen santhakumar