திருமண நாள் அன்று கணவன்மார்கள் தன் மனைவிக்கு கார், நகை, புடவைகள் என பரிசளிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து இருப்பதோ வித்தியாசமான ஒன்று.
தர்மேந்திரா அனுஜா என்ற நபர் தன் மனைவிக்கு திருமண நாள் பரிசாக நிலவில் நிலம் வாங்க திட்டமிட்டுள்ளார். அதனையடுத்து, Luna society international என்ற நிறுவனம் மூலம் நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்த்திராத அவரின் மனைவி இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார்.
இந்த நிலம் வாங்கியது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த தம்பதியர் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவில் நிலம் வாங்கிய முதல் நபர் நான் தான் என்று தர்மேந்திர அனிஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரே, பீகாரை சேர்ந்த நீரஜ் குமார் என்பவர் தனது பிறந்தநாளுக்காக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#tamilthisai #rajasthan #weddinganniversary #moon #india