பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்து பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கர்நாடக, உத்திரகாண்ட உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்திள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்றாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை வித்தித்துள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து நகரங்களிலும் டிசம்பர் 31- ஆம் தேதி இரவு 08.00 மணி முதல் ஜனவரி 1- ஆம் தேதி காலை 06.00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 31- ஆம் தேதி அன்று இரவு 07.00 மணிக்கு அனைத்து கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.