இந்தியா வணிகம்

ரெப்போ விகிதம் 75 புள்ளி குறைப்பு.. வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையை சமாளிக்க பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இன்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:-  

75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைக்கப்படுகிறது. அதேபோல் ரிவர்ஸ் ரெபோ விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ALSO READ  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்- RBI மறுப்பு

வங்கிகளின் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டுக் கடனுக்கான வட்டி குறைய  வாய்ப்புள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.ரிசர்வ் வங்கி தீவிரமாக களத்தில் உள்ளது.சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

21 நாள் முடக்கம் காரணமாக பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுகிறது என அறிவித்துள்ளார்.

இதையடுத்து  21 நாள் முடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக RBI சார்பில் 3.74 லட்சம் கோடி ரூபாய் பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

ALSO READ  உ.பி.-ல் 6 வயது சிறுவன் கடத்தல்... 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்...

வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்.

எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கும் 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு.

கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க உத்தரவு; இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது  என கூறினார்.

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்.  பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ.7.4 கோடி சர்வதேச பரிசு – பாதி பணத்தை 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வழங்கும் மராட்டிய ஆசிரியர்

naveen santhakumar

Mostbet Uzbekistan Официальный сайт спортивных ставок и онлайн-казино UZ 202

Shobika

வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு; எய்ம்ஸ் இயக்குனர் வேண்டுகோள் ! 

News Editor