இந்தியா

2-சக்கர வாகன நம்பர் பிளேட்டில் பாலினம் குறித்த பதிவு : புது டெல்லி மகளிர் ஆணையம் நோட்டிஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி

‘செக்ஸ்’ (SEX) என்ற சொல்லைக் கொண்ட வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றக் கோரி புது தில்லி மகளிர் ஆணையம் போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

DCW sends notice to transport department after Delhi girl gets 'DL 3 SEX'  registration number for scooter

புதிய ஸ்கூட்டியை வாங்கிய ஒரு பெண் தனது வாகனப் பதிவு எண்ணில் ‘SEX’ என்ற வார்த்தையைக் கொண்ட ஒதுக்கீட்டுத் தொடரைப் பெற்றுள்ளார்.

இதனால் அந்த பெண் மிகுந்த தர்மசங்கடத்திற்கு ஆளாகி உள்ளார். சாலையில் செல்லும்போது பலர் இதை கூறி அவரை கிண்டல் செய்வதாகவும், பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

This Girl From Delhi Was Assigned With 'DL 3 SEX' As Her Number Plate & Now  It Can't Be Changed

இது குறித்தது புது டில்லி பெண்கள் ஆணையத்தில் அந்த பெண் புகார் அளித்து உள்ளார்.

ALSO READ  மும்பையில் ஒரு நிர்பயா ..பாலியல் வன்கொடுமை.. பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

இதைத்தொடர்ந்து டில்லியைச் சேர்ந்த பெண்ணின் இருசக்கர வாகன பதிவு பலகையில் ‘செக்ஸ்’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதை மாற்றும்படி, டில்லி பெண்கள் ஆணையம், போக்குவரத்து துறைக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியாது. இருசக்கர வாகன பதிவு எண்ணை உடனடியாக மாற்றி தரும்படி அதில் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.

ALSO READ  இனி தங்க நகைகளுக்கு இது கட்டாயம்…!

மேலும் இதே போன்ற பதிவு எண் வரிசை கொடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பாக பதிவாகி உள்ள புகார்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் டில்லி போக்குவரத்து துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏப்ரல் 20 முதல் அமேசான் ஃபிளிப்கார்ட் அத்தியாவசிய மற்ற பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி…

naveen santhakumar

இந்தியாவில் முதன் முறையாக ஃபோக்ஸ்வேகன், அவ்டி மீது வழக்குப் பதிவு…

naveen santhakumar

1xbet Casino México Bono De Bienvenida $40, 000 Mx

Shobika