இந்தியா

அதிர்ச்சியூட்டும் தகவல்…… கரன்சி நோட்டுகள் மூலம் கொரோனா பரவும்…ரிசர்வ் வங்கி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) ஞாயிற்றுக்கிழமை, கொரோனா வைரஸ் கரன்சி நோட்டுகள் மூலம் பரவும் என ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியதியுள்ளது.

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா??? இல்லையா??? என்பதை தெளிவுபடுத்தக் கோரி 2020 ஆம் ஆண்டு மார்ச்-9 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு CAIT கடிதம் எழுதியதையடுத்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இந்த கடிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுப்பப்பட்டது,இதைத்தொடர்ந்து RBI, CAIT க்கு பதிலளித்தது.

ALSO READ  கொரோனா பரவலால் ஊரடங்கை நீட்டித்து பிரான்ஸ் !

அதில்,ரூபாய் நோட்டுகள் (Currency Notes) மூலம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவக்கூடும் என்றும், இதனால் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது. இந்த செய்தியை CAIT ஒரு அறிக்கையில் கூறியது.

ரிசர்வ் வங்கி மேலும் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக, மொபைல் மற்றும் இன்டர்நெட் வங்கி முறைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற பல்வேறு ஆன்லைன் டிஜிட்டல் சேனல்கள் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பணம் செலுத்தலாம். முடிந்தவரை பணத்தை பயன்படுத்துவதை அல்லது திரும்பப் பெறுவதைத் தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

ALSO READ  1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Para Yatırma Işleminizde 0 Kazanın

CAIT தேசியத் தலைவர் பி.சி.பார்டியா மற்றும் பொதுச்செயலாளர் பிரவீன் காண்டேல்வால் ஆகியோரின் கூற்றுப்படி, ரிசர்வ் வங்கியின் பதில் ரூபாய் நோட்டுகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்கிறது. எனவே, ரூபாய் நோட்டுகளைக் கையாளுவதைத் தவிர்ப்பதற்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை (Digital Transactions) அதிகபட்சமாகப் பயன்படுத்துவது அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயம் செய்து கோடீஸ்வரனான இளைஞன்.. ! எப்படி தெரியுமா?

Admin

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு..!

naveen santhakumar

99 ஆண்டு குத்தகை : என்னது 24 வருடங்களில் இந்தியா சுதந்திரம் முடியப்போகிறதா ???

naveen santhakumar