இந்தியா

பிஜேபி அறிவிப்பிற்கு ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

நாட்டின் முதன்மையான துறைகளில் தனியார்மயமாக்கலை அறிவித்தது நாட்டுக்குச் சோகமான நாள் என ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிற்சங்க அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் மய அறிவிப்புகளால்  எதிர்க்கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில் அரசின் தொழிற் சங்க அமைப்பாளர் பாரதிய மஸ்தூர் சங்கம் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

நிலக்கரி, கனிமம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, விண்வெளி ஆய்வு, அணு ஆற்றல், மின்வழங்கல் ஆகிய துறைகளில் தனியாரை அனுமதிக்கும் அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இது அரசிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லாததை காட்டுகிறதே என்று பாரதிய மஸ்தூர் சங்கம் கூறியது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள   பாரதீய மஸ்தூர் சங்க பொதுச் செயலாளர் விரிஜேஷ் உபாத்யாய் (Vrijesh Upadhyay):-

ALSO READ  ஹிமாச்சல பா.ஜ.க. எம்.எல்.ஏ மறைவு…! 

இதுபோன்ற முடிவெடுக்குமுன் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரிடமும் கலந்து பேசாதது அரசின் கொள்கையில் அதற்கே நம்பிக்கை இல்லாததைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது. தனியார் மயமாக்கல் வேலையிழப்புக்கும், சுரண்டலுக்கும் வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாட்கள் அறிவிப்பு குறித்து யாரெல்லாம் பரவசம் அடைந்தார்கள் அவர்களுக்கெல்லாம் நான்காவது நாள் அறிவிப்பு பெரும் இடியாக விழுந்து உள்ளது. தனியார்மயமாக்குதல் இது தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது இது அரசாங்கத்தின் ஆற்றல் இன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த புதுவை முதல்வர்!

News Editor

Лучшие Онлайн Казино 2023 ᐈ Списки Бонусов Отзыв

Shobika

எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்-சீனாவிற்கு இந்தியா கடும் கண்டனம்….

naveen santhakumar