இந்தியா

படமாகிறது கங்குலியின் வாழ்கை வரலாறு- தாதா கேரக்டரில் நடிக்க போவது யார்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

சினிமாவில் பயோபிக் எனப்படும் வாழ்கை வரலாற்று திரைப்படங்கள் எடுப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் சவுரவ் கங்குலியின் வாழ்கை படமாகிறது.

Sourav Ganguly Biopic In The Making; Will Ranbir Kapoor Say YES?

மகேந்திர சிங் தோனி (MS Dhoni), முகமது அசாருதீன் (Mohammad Azharuddin) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றது.

இதில், சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக எடுத்து வெளியிட்டனர். அதேபோல கபில் தேவ், மிதாலி ராஜ் போன்ற வீரர்களின் வாழ்க்கை படமாகி வருகிறது. இப்போது இந்த வரிசையில் சவுரவ் கங்குலியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கங்குலி கூறும்போது,

ALSO READ  ஹத்ராஸ் சம்பவம்….. சர்வாதிகாரப்போக்கை அரசு கைவிட வேண்டும்...மாயாவதி கருத்து...

எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஒப்புதல் அளித்துள்ளேன். இயக்குனர் யார் என்பதை இப்போது சொல்ல இயலாது. இன்னும் சில தினங்களில் அனைத்தும் முடிவாகிவிடும் என்றார்.

கடந்த 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் வல்லவரான கங்குலி ஏராளமான சிக்சர், பவுண்டரிகள், சதங்கள் அடித்து கவனம் பெற்றவர்.

ALSO READ  இலங்கை சுற்றுப் பயணத்தில் ராகுல் டிராவிட்; உற்சாகத்தில் ரசிகர்கள் !

கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகளை பெற்றுள்ளது. தற்போது அவர் பி.சி.சி.ஐ. தலைவராக பதவி வகிக்கிறார்.

கங்குலியின் சிறுவயது வாழ்க்கையில் இருந்து பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டது வரை உள்ள சம்பவங்கள் படத்தில் இடம்பெற உள்ளது. இதில் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடையாள அட்டையில் நாய் புகைப்படம்..அதிர்ச்சி அடைந்த வாக்காளர்

News Editor

கொரோனா வார்டில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி-உதை :

Shobika

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் ப்ளூ டிக் சர்ச்சை முடிவுக்கு வந்தது…! 

naveen santhakumar