இந்தியா

22 சதவீத பணிகள் மட்டுமே செயல்பட்டது சபாநாயகர் ஓம்பிர்லா குற்றச்சாட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எம்.பி.,க்கள் அமளி காரணமாக சிறப்பாக நடைபெறவில்லை என சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம் சாட்டியுள்ளார். .

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு நாளான இன்று சபாநாயகர் ஓம்பிர்லா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நான் எதிர்பார்த்தபடி, கூட்டத்தொடர் அமையாதது வேதனை அளிக்கிறது. அவையில் அதிகளவு பணிகள் நடப்பதற்கும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்படுவதற்கும் முயற்சி செய்வேன்.

ஆனால், இந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடத்துவதற்கு உகந்ததாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது.

நள்ளிரவு நேரத்திலும் கூட விவாதம் நடந்தது. கொரானா தொற்று காலத்திலும், எம்.பி.,க்கள் அவை சிறப்பாக செயல்படுவதற்கு தங்களது பங்களிப்பை அளித்தனர்.

ALSO READ  பசு திருட்டால் ஒரு இளைஞரை அடித்து கொன்ற கும்பல் 

அவையின் கண்ணியத்தை எம்.பி.,க்கள் காக்க வேண்டும் என நான் விரும்புவேன். அவையில் விவாதங்கள், உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவையின் கண்ணியத்தை குறைக்கக்கூடாது.

பாராளுமன்ற பாரம்பரியம் மற்றும் அதன் கண்ணியத்தை காக்கும் வகையில் அவை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

கோஷம் போடுவதும், பேனர்கள் எழுப்புவதும் பார்லிமென்ட் கலாசாரத்தில் கிடையாது. தங்களது உணர்வுகளை, எண்ணங்களை தங்களது இருக்கைகளில் இருந்தே எம்.பி.,க்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ALSO READ  65.5 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய ஒன்றிய அரசு ஒப்பந்தம்
Discussion And Dialogue Solution To All Problems: LS Speaker Om Birla -  Nagaland Page

புதிய பார்லிமென்ட் வளாகத்தில், இந்தியாவில் 75வது சுதந்திர தினம் கொண்டாடுவோம் என சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டுட்டார்.

அதுபோன்று பாராளுமன்றம் 21 மணி நேரம் 21 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. மொத்தமுள்ள 96 மணி நேரத்தில் 74 மணி நேரம் 46 நிமிடங்களுக்கு பணிகள் செய்ய முடியவில்லை.

22 சதவீத பணிகள் மட்டுமே செயல்பட்டது. 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. ஓபிசி சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. என்று சபாநாயகர் ஓம் பிர்லா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவர்களுக்கு கொரோனா- திறந்த வேகத்தில் மூடப்பட்ட பள்ளிகள்…!

naveen santhakumar

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதருக்கு கொரோனா….

naveen santhakumar

1xbet az 1xbet Azerbaycan,1xbet az merc saytı, en yaxsi bukmeke

Shobika