இந்தியா

கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னராக பதவியேற்றார் டாக்டர்.தமிழிசை சௌந்தராஜன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ  மற்ற மாநிலங்களை போல புதுச்சேரி மக்களும் கஷ்டப்படக்கூடாது-ஆளுநர் தமிழிசை 

இந்தநிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு கவர்னராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5வது பெண் கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றுக்கொண்டார்.பதவி ஏற்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ்க்கு பயந்து விமான சேவை நிறுத்தம்

Admin

இந்திய – சீனா மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம், சீன தரப்பில் 43 பேர்…

naveen santhakumar

மும்பை-புதுக்கோட்டை….மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதி:

naveen santhakumar