இந்தியா

கொரோனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். (PCR) கருவிகளை தமிழகத்துக்கு அளித்த டாட்டா நிறுவனம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


சென்னை:- 

கொரோனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். (PCR) கருவிகளை தமிழக அரசுக்கு டாட்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டாடா நிறுவனத்திற்கு தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சோதனைக்கு தேவையான ரேபிட் கிட், பி.சி.ஆர். கருவிகள் பற்றாகுறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேபிட் கருவிகள் ரத்தத்தில் ஆன்டிபாடி அளவு எவ்வளவு உள்ளது என்பதை மட்டும் கூறக்கூடியது. இந்த அளவு குறையும் நபர்களை உடனடியாக பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். 

ALSO READ  சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி !

கடந்த மார்ச் 30ஆம் தேதி சீனாவிடம் 5 லட்சம் ரேபிட் கிட்களை வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்தது. ஆனால், இன்று வரை அந்த கருவிகள் வந்து சேரவில்லை.

இதனிடையே, ரேபிட் கிட், பி.சி.ஆர். கருவிகள் உள்பட கொரோனா பரிசோதனை பொருட்களை, மாநிலங்கள் தன்னிச்சையாக கொள்முதல் செய்யவோ, இறக்குமதி செய்யவோ வேண்டாம் எனவும் மத்திய அரசே இறக்குமதி செய்து உரிய முறையில் வழங்கும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகி, கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றி

முன்னதாக, கொரோனா நிவாரண நிதியாக டாட்டா சன்ஸ் நிறுவனம் மற்றும் டாட்டா ட்ரஸ்ட் சார்பில் ரூ.1500 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika

Mostbet, Azərbaycanda ən yaxşı onlayn kazinolardan bir

Shobika

‘யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்ககூடாது’  டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

News Editor