இந்தியா

2ம் வகுப்பு பயிலும் மாணவரின் காலைப் பிடித்து மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் மாணவருக்கு தண்டனை வழங்குவதாக கருதி மாணவரின் காலைப் பிடித்து மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது சோனு என்ற மாணவன் மற்றொரு மாணவனை கடித்து விட்டான். மாணவனை கடித்ததற்காக தலைமை ஆசிரியர் மனோஜ் சிறுவனை மிரட்டி மன்னிப்பு கேட்க கூறி உள்ளார். ஆனால் சிறுவன் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் - மலாலா அதிர்ச்சி
42% kids bullied at school: 42 per cent of kids bullied at schools, says  survey | Bengaluru News - Times of India

இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், 2ம் வகுப்பு படிக்கும் சோனுவை மேல் மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு மன்னிப்பு கேட்காவிட்டால் மாடியில் இருந்து கீழே போட்டுவிடுவதாக மாணவர் சோனுவின் ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டவாறு மிரட்டி உள்ளார்.

Camelot schools takes its discipline too far, say current and former  students who allege abuse.

சிறுவனின் அலறல் மற்றும் அழுகையைக் கேட்ட குழந்தைகள் கூட்டம் கூடி பதற்றத்துடன் வேடிக்கை பார்த்ததை அறிந்த பிறகுதான் சோனுவை தலைமை ஆசிரியர் விடுவித்து உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உத்தர்காண்டில் சிக்கியது அரியவகை சிவப்பு பவழ நாகம்… 

naveen santhakumar

இந்த அப்பளம் கொரோனாவை விரட்டும் மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்திய பாபி ஜி அப்பளம்… 

naveen santhakumar

51-வது தாதாசாகெப் பால்கே விருது : அக் 25ம் தேதி ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது

News Editor