இந்தியா தமிழகம்

ஆமா லஞ்சம் கொடுத்தேன்.. ஒப்புக் கொள்ளும் தமிழக மக்கள்.. அதிர்ச்சி முடிவுகள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆமா லஞ்சம் கொடுத்தேன்.. ஒப்புக் கொள்ளும் தமிழக மக்கள்.. அதிர்ச்சி முடிவுகள்..

தமிழகத்தில் தங்களுடைய வேலையை முடிப்பதற்காக 62 சதவீத மக்கள் லஞ்சம் கொடுப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது .The India Corruption Survey என்கின்ற ஆய்வின் மூலமாக இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது .இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களிடம் இந்த ஆய்வு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன .

அதில் 62 சதவீத மக்களில் 35 சதவீதம் பேர் பலமுறை தாங்கள் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் .மீதம் 27 சதவீத மக்கள் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தங்களுடைய வேலைகளுக்காக லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். மிச்சம் இருக்கக்கூடிய 8 சதவீத மக்கள் மட்டுமே லஞ்சம் கொடுக்காமல் தங்களுடைய வேலையை முடித்ததாக சொல்லியிருக்கிறார்கள் .

ALSO READ  மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் - புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

குறிப்பாக பத்திரப்பதிவு செய்யும் போதும் நிலம் தொடர்பான விஷயங்களுக்கு 41 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்து தங்களுடைய வேலைகளை முடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 19 சதவீதம் பேர் நகராட்சி மற்றும் மாநகராட்சி வேலைகளுக்காகவும் 15 சதவீதம் பேர் காவல்துறையினருக்கும் லஞ்சம் கொடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள் .

25 சதவிகிதம் பேர் அரச நிறுவனங்களில் தங்களுடைய வேலையை முடிப்பதாக தங்களுடைய வேலையை முடிப்பதற்கு லஞ்சம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் .

ALSO READ  திருப்பதியில் இனி நோ பிளாஸ்டிக் பாட்டில்.

.இந்த ஆய்வு தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ,தெலுங்கானா ,மஹாராஷ்டிரா, கோவா, குஜராத், ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ,ஒரிசா ,ஜார்கண்ட் ,பீகார், உத்தரபிரதேசம் ,புதுடெல்லி ,உத்ரகண்ட், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xbet Casino México Bono De Bienvenida $40, 000 Mx

Shobika

1xbet 보너스 첫 입금 시 1xbet 보너스 받기보너스 1xbet Co

Shobika

மேகாலயா முதல்வருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது

News Editor