இந்தியா

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: பிப்ரவரியில் 3வது அலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் பிப்ரவரி மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கலாம் என ஐஐடி பேராசிரியர் கணித்துள்ளார்.

கான்பூர்

.நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா திரிபு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த சூழலில், கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்த குழுவின் இடம்பெற்றுள்ள கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்திர அகர்வால் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ALSO READ  1win Aviator Game Down Load Apk For Free Play Online Inside Indi

அதன்படி, இந்தியாவில் மூன்றாவது அலை பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் நாளொன்றுக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வீதம் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.நல்வாய்ப்பாக இரண்டாம் அலையை ஒப்பிடும் போது, இந்த முறை பாதிப்பு குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர்,இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, டெல்டா திரிபு தீவிரத்தைவிட ஒமிக்ரான் திரிபின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என தெரிவித்தார்.பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, கூட்டம் கூடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அகர்வால் கேட்டுக்கொண்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லியிலிருந்து உ.பி. நோக்கி புறப்பட்ட பேருந்து கவிழ்ந்து பலர் படுகாயம்:

naveen santhakumar

Пин Ап казино официальный сайт Pin Up Вход, регистрация, зеркал

Shobika

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை

Admin