இந்தியா

கொரோனா மூன்றாம் அலை: குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒரு பார்வை…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 35.29 சதவீதம் பேர் 20 வயதுக்கும் குறைவானவர்கள்.

எந்தவொரு நாட்டிற்கும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவது என்பது அவ்வளவு சர்வசாதாரணமான காரியம் கிடையாது இது ஒரு மிகப்பெரிய சவாலான காரியம் தான். 

இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், விரைவில் கொரோனாவின் 3ம் அலை தற்போது இந்திய நகரங்களை தாக்கி வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளே பிரதானமாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பதால், பெற்றோர்கள் அனைவரும் அதிக கவலையில் உள்ளனர்.


இந்நிலையில், கொரோனா 3ம் அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என கூறப்படும் நிலையில், அவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். அது விரைவில் நடக்குமென்றாலும், இந்த வருடம் அது நடக்குமா என்பது கேள்விக்குட்பட்டு இருக்கிறது. குழந்தைகளை நோய்க்கு எதிராக மாற்ற, ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரிய அளவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமூகப்பரவல் குறைவாகும்போது, பள்ளிகளை திறக்கலாம். அப்படி திறக்கும்போது, ஆசிரியர்களும் பெற்றோரும் தடுப்பூசி போட்டிருந்தால், மூன்றாவது அலையை கையாள்வதில் சிக்கல் இருக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா ஸ்வாமிநாதன் கூறியுள்ளார்.

ALSO READ  وان إكس بت ويكيبيدي

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் 12 – 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர், பயோ என்டெக் தடுப்பூசிகள் போட அனுமதி தரப்பட்டு, பல இடங்களில் தரப்பட்டும் வருகின்றனர். அமெரிக்காவில், இவற்றோடு மாடர்னா தடுப்பூசியும் குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அங்கு, 16 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தரப்படவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசியும், குழந்தைகளுக்கான தங்கள் தடுப்பூசி ஆய்வுகளை தொடங்கியுள்ளன. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி ஆய்வு, 6 முதல் 17 வயது வரையிலான அனைவருக்கும் மத்தியில் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, இந்த தடுப்பூசி ஏற்கெனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தரப்பட்டு வருகின்றது.

இதுவொருபுறம் இருக்க, குழந்தைகளுக்கான தடுப்பூசியில் நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று நிதி ஆயோக்கை சேர்ந்த மருத்துவர் பௌல் கூறியுள்ளார். 

இப்போதைக்கு பைசர் மட்டுமே இங்கு குழந்தைகளுக்கு தரப்பட தயாராக உள்ளது. இருப்பினும் அவற்றின்மீது கூடுதல் கவனம் தரப்பட்டு, மேற்கட்ட ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.

சரி, உலகளவில், குழந்தைகளுக்கு தரப்பட தயாராகிவரும் தடுப்பூசிகள் குறித்து காணலாம்.

கோவேக்சின்:-

இந்தியாவில் உற்பத்தியாகும் இந்த தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. 

ALSO READ  பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் !

தற்போது 2 – 18 வயதுக்குட்பட்டோர் மத்தியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் 2 / 3 ம் கட்ட மருத்துவ ஆய்வுக்காக, இந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

சைடஸ் கேடிலா தடுப்பூசி:-

12 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்துவதற்க்காக இந்த தடுப்பூசிக்கான ஆய்வுகள், அகமதாபாத்தில் நடந்து வருகிறது. 

அடுத்த 2 வாரங்களில், 

 அரசு ஒப்புதல் அளிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பைசர்:-

இதற்கு, முன்காப்பீடு வழங்கப்பட உள்ளது. அது கிடைத்தவுடன், இந்தியாவில் நடைமுறைக்கு வரும். 

இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கல்ரியா கூறுகையில், 

இந்த தடுப்பூசி, பெரியவர்களுக்கும் போடப்படுகிறது. குழந்தைகளுக்கு போடப்படும்போது, அவர்களுக்கு கிடைக்கும் தடுப்பு சக்தியின் மூலம் பெரியவர்களும் பயன்பெற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஸ்புட்னிக் வி:-

இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கே வரும் ஜூன் இறுதியில்தான் இந்தியாவில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிக்கான ஆய்வுகள் முடிவடைந்திருந்தாலும், அதை இந்தியா கொள்முதல் செய்வதாக இன்னமும் ஒப்பந்தம் போடப்படவில்லை.

மாடர்னா:-

12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்துப்பூசி சிறந்ததென கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் இதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Мостбет: бонусы на первый депозит и лучшие ставки на спор

Shobika

இமாசலபிரதேச நிலச்சரிவு…உயரும் பலி எண்ணிக்கை…

Shobika

தலிபானுக்கு ஆதரவு -எம்.பி., மீது தேசதுரோக வழக்கு!

News Editor