இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெளிநாட்டு காணிக்கை குறைந்தது..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருமலை:-

கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை 94 சதவீதம் வரை குறைந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

Darshan resumes at Tirumala Tirupati temple, only 6,000 devotees allowed  per day | The News Minute

இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கை மூலம் தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி கிடைக்கிறது. இதேபோல் வெளிநாட்டு பக்தர்களும் கரன்சி நோட்டுகளை உண்டியலில் செலுத்துகின்றனர்.

2000 முதல் 2020ம் ஆண்டு வரை 157 வெளிநாடுகளை சேர்ந்த கரன்சி நோட்டுகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர்.

ALSO READ  திருப்பதியில் மண் சரிவு; உருண்டு வந்த பாறைகால்: பேருந்தை நிறுத்திய டிரைவர் - தப்பிய பயணிகள்

இதில், மலேசியா கரன்சி நோட்டுகள் 46 சதவீதம், அமெரிக்க டாலர் 16 சதவீதம், இலங்கை 11, சவுதி 6, கத்தார் 4, நேபால் 3 சதவீதம் என பாகிஸ்தான் உள்பட பல்வேறு வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

2019-2020ம் ஆண்டில் ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டு கரன்சி மூலமாக ரூ.27.49 கோடி வருவாய் வந்தது. ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பக்தர்கள் யாரும் வராத நிலையில் உண்டியல் கரன்சி நோட்டுகள் எண்ணிக்கை 94 சதவீதம் குறைந்துள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ALSO READ  கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது ஏன் ?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ரூ.300 சிறப்பு தரிசன மற்றும் விஐபி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 310 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 37 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டதில், ரூ.1.89 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் விஸ்கி பாட்டில் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையாகியுள்ளது….

naveen santhakumar

Azərbaycanda onlayn kazino Pin Up Pin Up slot maşınlar

Shobika

Mostbet-AZ90 Bukmeker və Kazino Azərbaycanda Bonus 550+250F

Shobika