இந்தியா

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி வீரமரணம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 3 வீரர்களில் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பது தெரியவந்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடுக்களூரை பூர்வீகமாக கொண்டவர் பழனி. இவர் கழுகூரணி கஜினி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் 18 வயதில் சேர்ந்த பழனி, ஹவில்தாராக லடாக் எல்லையில் பணிபுரிந்து வந்தார். பழனிக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா, திவ்யா என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.

பழனியின் தம்பி இதயக்கனி என்பவர் ராணுவத்தில் அலுவலக உதவியாளராக ராஜஸ்தானில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு தான் சீன ராணுவத்தின் தாக்குதலில் பழனி உயிரிழந்த செய்தி முதலில் தெரிந்துள்ளது  என்று கூறப்படுகிறது.

ALSO READ  3 பேருடன் திருமணம்…கையில் குழந்தை…யார் தான் அப்பா?

இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பழனி, இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெற இருந்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழந்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin-up 306 Casino Giriş Qeydiyyat, Bonuslar, Yukl

Shobika

Pin-up Casino Resmi Web Sitesi On The Internet Casinoda Gerçek Parayla Oynayı

Shobika

வெங்காய விலை கிலோவுக்கு 22 ரூபாய்க்கு விற்பனை : மத்திய அரசு

Admin