இந்தியா

முதல்வருக்கு கொரோனாவா???… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அகர்தலா:-

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தெப் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து திரிபுரா மாநிலம் பாஜக முதலமைச்சர் பிப்லப் குமார் தெப் தன்னை சுய தனிமைப்படுத்துவது உட்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பிப்லப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:-

எனது குடும்பத்தில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தில் மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மற்றவர்களுக்கு இல்லை. எனக்கான பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. எனினும் மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்தி உள்ளேன்.

ALSO READ  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை:

எனது குடும்பத்தினர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

திரிபுராவில் இதுவரை கொரோனாவிலிருந்து 4,400 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது 1700 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீன வங்கிகளுக்கு ரூ.5,400 கோடியை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு..

naveen santhakumar

லஞ்சம் கொடுக்க முடியாததாலும் வேலையில்லாததால் போர்ச்சுகீஸுக்கு போறோம்.. சர்ச்சையை ஏற்படுத்திய பத்தாம் வகுப்பு வினாத்தாள்…

naveen santhakumar

கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது ஏன் ?

naveen santhakumar