இந்தியா

“புடி புடி” பெண்களை “பொடி பொடி”யாக்கும் வலைதளவாசிகள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலாய்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகைகள் போட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 2020 IPL தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

கடந்த IPL சீசனில் மோசமாக விளையாடிய பெங்களூர் அணி, இந்த சீசனில் ஆரம்பமே சிறப்பாக விளையாடி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை மாறி, மாறி பிடித்து அசத்தியது. பெங்களூர் அணி ரசிகைகள் சிலர் CSK அணியை கலாய்த்து பாட்டுப் பாடி இணையத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் “CSKக்கு புடி புடி” என்ற வார்த்தை வைரலானது.

‘புடி புடி’ என்றால் கன்னடத்தில் ‘தூள், தூளாக’ நொறுக்கி விட்டோம் என அர்த்தம்.இதனால் CSK ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளாகினர். நமக்கு ஒரு சந்தர்ப்பம் வரும் என காத்திருந்தனர். ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூர் அணி முன்னேறியது. ஆனால் எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியிடம் மோசமான தோல்வி அடைந்து தொடரில் இருந்தே வெளியேறியது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட CSK ரசிகர்கள், RCB ரசிகைகள் பதிவிட்ட ‘புடி புடி’ வீடியோவை கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்தனர்.

ALSO READ  5 பந்தில் 5 சிக்சர்.. தல தோனி அட்டகாசம்..!!!

எங்கு பார்த்தாலும் “புடி புடி” பெண்களை பொடி பொடியாய் நொறுக்கி தெறிக்கவிட்டு மீம்ஸ் போட்டுவருகின்றனர். விளையாட்டில் ஆக்ரோஷம் காட்டி பெண்களை கவரும் கோலி ஆட்டத்தில் கோட்டை விட்டுவிடுகிறார் என பலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xBet KZ скачать на Андроид бесплатно 2023 Мобильное приложение 1хбет КЗ в Казахстан 激

Shobika

காலநிலை நிச்சயமற்ற தன்மையால் 2050 ஆண்டில் சென்னை‌, மும்பை நகரங்கள் நீரில் மூழ்கும்

News Editor

1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

Shobika