இந்தியா

அவசர எண்ணில் ரசகுல்லா கேட்ட சர்க்கரை நோயாளி.. போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், போலீசார் ஒருவர் ரசகுல்லா வாங்கி கொடுத்து முதியவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அனைவருக்கும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ:-

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே அஸ்ரத்கஞ்ச்  பகுதியை சேர்ந்தவர் ராம்சந்திர பிரசாத் கேசரி (80). இவர் அங்குள்ள கஸ்மந்தா குடியிருப்பில் வசித்து வருகிறார். மனைவியை இழந்த இவரின் மகன்கள் மற்றும் மகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். 

ராம்சந்திர பிரசாத்திற்கு கடந்த 18 ஆண்டுகளாக இவருக்கு ஹைபோகிளைசிமியா ( Low sugar) என்ற பாதிப்பு உள்ளது. இதனை சமன் செய்ய வகையில் ராம்சந்திர பிரசாத் தினமும் இனிப்பு வகைகளை சாப்பிடுவார்.

இந்நிலையில், ஊரடங்கால்  கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை இந்நிலையில் உதவி மையத்தை தொடர்பு கொண்ட ராமச்சந்திர பிரசாத் தனது நிலையை எடுத்துக்கூறி ரசகுல்லா வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்ட போலீஸார் யாரோ விளையாடவில்லை உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டனர். ஏனெனில் இதுபோன்று பீட்சா, பான் மசாலா சில சமயம் மதுபானம் கேட்டு கூட ஏராளமான அழைப்புகள் தொடர்ந்து வருகிறது.

ALSO READ  கொரோனோ பயத்தால் குளியறையில் மனைவியை பூட்டிய கணவன்

இதை எடுத்து சந்தோஷ் சிங் என்ற காவல் அதிகாரி ராமச்சந்திரா-வின் வீட்டிற்கு ஆறு ரசகுல்லாகளை வாங்கி கொண்டு சென்றுள்ளார். அவரே தனது கையால் ஊட்டி விட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டிக்கிடந்த மதுபாட்டில்கள்; போட்டிபோட்டு பொறுக்கிய மதுபிரியர்கள் !

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

உண்மையான உதவிகள் வேண்டி பல அழைப்புகள் வருகிறது. சமீபத்தில் கூட கர்ப்பிணியான ஆசிரியை ஒருவர் உதவி மையத்தை தொடர்பு கொண்டார் அவருக்கு போலீசார் சார்பில் உணவு வழங்கப்பட்டது என்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று முதல்… ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

naveen santhakumar

குழந்தைகளின் ஆபாசப்படங்களும் அதிரடி நடவடிக்கைகளும்…

Admin

தூங்கி விழுந்த உபர் ஓட்டுநர்… தானே காரை ஓட்டிய பெண் பயணி..!!!

naveen santhakumar