இந்தியா

ஊரடங்கு உத்தரவு: குடும்ப தகறாறு… கங்கையில் 5 குழந்தைகளை வீசி கொன்ற பெண்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பதோஹி:-

உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் கோபிகஞ்ச் அருகே ஜஹான்கிராபாத் கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தனது ஐந்து குழந்தைகளை கங்கை நதியில் வீசி கொன்று உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த பாதோகி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம்பாதன் சிங்:-

மஞ்சு யாதவ் என்கிற இந்தப் பெண்மணிக்கும் அவரது கணவர் ம்ருதுள் யாதவ் (எ) முன்னா யாதவிற்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்துள்ளது.

ம்ருதுள் யாதவ் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையில்லாமல் இருந்துள்ளார்கள். தினக்கூலியான அவருக்கு வேளையில்லாத குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தரவோ அல்லது குடும்ப செலவிற்கு பணம் தரவோ இயலவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட தகறாறு காரணமாக அவரது மனைவி இந்த முடிவை எடுத்துள்ளார்.

ALSO READ  சட்டமன்ற உறுப்பினர்களுக்காக பயிற்சி முகாம் !

தனது குழந்தைகளான சிவசங்கர் (8), கேஷவ் பிரசாத் (3), பூஜா என்கிற சரஸ்வதி (6), ஆர்த்தி (10), மாதேஸ்வரி (12) ஆகிய ஐந்து குழந்தைகளையும் கங்கை நதியில் வீசி கொலை செய்துள்ளார். பின் தானும் நதியில் குதித்துள்ளார், ஆனால் மனமாற்றம் ஏற்பட்டு அவர் மட்டும் கரை திரும்பியுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி சென்று குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அதனால் அவர்களால் காப்பாற்ற இயலவில்லை.

ALSO READ  நம்ம சென்னைக்கு 382 வயசாச்சுங்க

இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம்பாதன் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு குழுக்களாக நீச்சல் வீரர்கள் குழந்தைகளை தேடி வருகிறார்கள்.

அந்தப் பெண்மணியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து கூறிய அக்கம்பக்கத்தினர் அந்த பெண்மணி சரியான மனநிலையில் இல்லை என்று கூறினார்கள். ஆனால் அந்த பெண்மணியின் கணவர் அவர் நல்ல மனநிலையில் தான் உள்ளார் என்று கூறியுள்ளார். அதோடு ஏன் இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேர்தலில் இந்த கட்சி 100 சீட்டுகள் வென்றால் என் தொழிலை விட்டுவிடுகிறேன்-பிரசாந்த் கிஷோர் !

News Editor

Online rulet oyna334

Shobika

சீன அதிபர் ஸி ஜின்பிங் மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு..

naveen santhakumar