இந்தியா

இளைஞரை நோக்கி சாவியை வீசிய போலீஸ்… இளைஞர் நெற்றியில் சொறுகிய பரிதாபம் !… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பேராடூன்:-

போலீசார் ஒருவர் இளைஞர்களை நோக்கி வீசிய மோட்டார் பைக் சாவி இளைஞரின் நெற்றியில் சொருகியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உத்ரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் ருத்ராபூர் என்ற நகரத்தில் தீபக் என்ற இளைஞர் தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக இரவு 8 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது, ஹெல்மட் அணியவில்லை. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி ஹெல்மட் ஏன் அணியவில்லை என்று விசாரித்தனர். அப்போது, போலீசாருக்கும்  அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாரிடத்திலிருந்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். போலீஸ் ஒருவர் தன் கையில் வைத்திருந்த சாவியை இளைஞர்களை நோக்கி எறிந்துள்ளார். சாவி நேரே அந்த இளைஞரின் நெற்றியில் போய் குத்தி விட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் வலியில் துடித்தார்.

ALSO READ  Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

நெற்றியில் குத்தி சாவியோடு ஊருக்கு ஓடி சென்ற இளைஞர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதார். இதையடுத்து, திரண்டு வந்த கிராம மக்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். போலீஸர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்த வேண்டியதாகி விட்டது. இதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொகுதி எம்.எல்.ஏ ராஜ்குமார் துக்ரால் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்த இளைஞர் தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  காதலியைத் தேடி 6000 மைல்கள் பயணம் செய்த இந்தியர்....

போலீஸார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், மக்களை கண்டபடி தாக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Shanthi

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா !

News Editor

கேரளாவில் இரண்டாவது முறையாக முதல்வரானார் பினராயி விஜயன் !

News Editor