இந்தியா

கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்; காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர்  முகக்கவசம் இன்றி சமூக இடைவெளி இன்றி கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை எதையும் கண்டுகொள்ளாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் கூடியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கங்கை அதில் நதியின் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் திருவிழாவானது வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ  சொப்பன சுந்தரிக்கு கொரோனா தொற்று உறுதி !

#corona #corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients #Punjab #PunjabLockdown #Delhi #uttrakand


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அளித்த சலுகை..! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்..!

News Editor

ஹாரன், சைரன் தொந்தரவு இல்லை – இனி காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கும்: மத்திய அரசு திட்டம்

naveen santhakumar

இணையத்தை கலக்கும் நிர்வாண மகப்பேறு போட்டோஷூட்

Admin