தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி:-
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவில்லை என்று தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டை தொடர்ந்து வெளிநாட்டு தடுப்பூசிகள் பலவும் இங்கு வரவிருக்கிறது. அவற்றில் பைசரும், மாடர்னாவும் அடங்கும். இவை இரண்டும், பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் போடும் வகையில் இருக்குமென்றும், அதன்மூலம், பல உயிர்களை நம்மால் காக்க முடியுமென எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.