இந்தியா வணிகம்

வாரணாசியில் இருந்து லண்டனுக்கு 4 டன் பச்சை காய்கறிகள் ஏற்றுமதி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாரணாசி:-

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் அளவிலான பச்சை காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கால் கவலை அடைந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், சுரைக்காய் உள்ளிட்ட 4 டன் காய்கறிகள் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்கள் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சரக்கு விமானம் மூலம் அந்த காய்கறிகள் வியாழக்கிழமை மாலை லண்டன் சென்றடைய உள்ளன. 

இது குறித்து மண்டல ஆணையர் தீபக் அகர்வால் கூறுகையில்:-

ALSO READ  புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை; ஆளுநர் அறிவிப்பு !

இதற்கு முன்பு வாரணாசியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு மட்டுமே காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த நகர்வு ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறோம். 

இந்த காய்கறிகளில் காசிப்பூர் அருகே அனில்குமார் ராய் என்பவரின் வயல்வெளிகளில் விளைந்தவை. இதன் மூலமாக விவசாயிகளுக்கு மேலும் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

ALSO READ  செல்பியால் விபரீதம்…. ராஜஸ்தான் அரண்மனையில் 18 பேர் உயிரிழப்பு..!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Glory Casino Online ️ Play on official site in Banglades

Shobika

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

naveen santhakumar