இந்தியா

கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது ஏன் ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல், மற்ற உறுப்புக்களை விட, நுரையீரல் நேரடியாக சுவாசிக்கும் காற்றுக்கு தொடர்புடையது. நாம் சுவாசிக்கும் காற்று முதலில் மூக்கு வாயிலாக நுரையீரலுக்கு சென்று, பின்னர் மற்ற உறுப்புகளுக்கு ரத்ததின் மூலம் செல்கிறது.எனவே தொற்று பாக்டீரியா, வைரஸ், புஞ்சை போன்றவை நேரடியாக நுரையீரலுக்கு சென்று சுலபமாக நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும். கொரோனா கிருமி நமது உடலுக்குள் சென்றவுடன் அதை நமது தற்காப்பு மண்டலம் எதிர்க்கும். நமது உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் வைரஸை எதிர்த்து போராடும். அப்போது நமது உடல் வெற்றி பெற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

ஆனால் தற்போது உள்ள கொரோனாவை எதிர்த்து வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது சைட்டோகெய்ன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். அது வைரசை கொல்வதற்காகத்தான் சுரக்கிறது. ஆனால் இந்தத் திரவம் வைரஸை மட்டும் கொல்லாமல், நமது நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு ஆக்சிஜன் செல்லும் இடத்தையும் சேதப்படுத்தும்.

ALSO READ  பி.எஸ்.பி.பி பள்ளியில் பாலியல் தொல்லை; தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை !

இது கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு 5-வது அல்லது 6-வது நாளில் நடக்கும். நமது உடலில் கொரோனா வைரஸ் இந்த சேதத்தை ஏற்படுத்த வில்லை. மாறாக வைரசை எதிர்த்துப் போராடும் நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அளவுக்கதிகமாக செயல்பட்டு சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை சுரப்பதினால் நுரையீரலின் மாற்றம் நடைபெறும் பகுதி சேதம் ஏற்படுகிறது. சேதத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.

அதனால் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்களால் சீராய்டு கொடுக்கப்படுகிறது. இந்த சீராய்டு வெள்ளை அணுக்களால் அதிகமாக சுரக்கப்படும் சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை கட்டுப்படுத்துகிறது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக சீராய்டு கொடுப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ALSO READ  கொரோனா எதிரொலி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.....

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் வந்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். சம்பந்தப்பட்ட நபர் காய்ச்சல் ஏற்பட்டதும் மாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவார். அதன் மூலம் குணமாகிவிடும். ஐந்து அல்லது ஆறாவது நாளில் மூச்சுத்திணறல் தொடங்கும். அப்படி தொடங்கினாலே கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியில் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.

எனவே முதலிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துவிட்டால் எளிதாக அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அயோத்தியை வந்தடைந்தது புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட ராமர் கோவில்….

naveen santhakumar

நமக்கு சாப்பாடு தான் முக்கியம் – உணவு வழங்காத ஆத்திரத்தில் அனைத்து புகைப்படங்களையும் அழித்த போட்டோகிராபர் …!

News Editor

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை… 

naveen santhakumar