தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
விஜயநகர் மாவட்டத்தில், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை பெய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
வடக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பெய்து வரும் நிலையில் விஜயநகர் மாவட்டத்தில் மட்டும் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாத காரணத்தினால் அரப்பனஹள்ளி தாலுகா கோனகேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மழை வேண்டி 2 கழுதைகளுக்கு அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்தின்போது, 2 கழுதைகளுக்கும் புத்தாடை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கிராம மக்கள் கழுதைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, திடீரென கிராமத்தில் மழை பெய்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.