இந்தியா

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையின் காலம் மே மாதத்துடன் முடியவுள்ளநிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. 

இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார். மேற்கு வங்க சட்டப்பேரவையின் முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ம் தேதியும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 10ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22ம் தேதியும், நடைபெறும் எனவும் சுனில் அரோரா அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக 7ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறும் என அறிவித்தார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்” என்றார். 


Share
ALSO READ  தமிழ்நாட்டின் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா களப் பணியாளர்களுக்கு முப்படைகளின் மரியாதை…

naveen santhakumar

மத்திய அரசு விவாசியிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !  

News Editor

ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் கிடைக்கும்…!

News Editor