அரசியல் இந்தியா உலகம்

உலக பணக்காரர்கள் பட்டியல் – அதானியின் வீழ்ச்சி?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக பணக்காரர்கள் பட்டியலில் 24வது இடத்துக்கு தள்ளப்பட்ட தொழிலதிபர் கவுதம் அதானி.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துவிட்டது. அதன்படி, கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளதால் உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அதானி குழும பங்கு விலைகள் நேற்று ஒரே நாளில் அதானி குழும பங்கு விலைகள் 5 சதவீதம் சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீச்சியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி ஈடுபட்டதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வக்கீல்கள் எம்.எல்.சர்மா, விஷால் திவாரி ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.


Share
ALSO READ  டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?… இன்று வாக்கு எண்ணிக்கை…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாய் மேல இவ்வளவு பாசமா.. விமானத்தில் வந்த நாயின் அஸ்தி

naveen santhakumar

கதற கதற 3 மகள்களை வன்கொடுமை தந்தை : நினைக்க முடியாத பதிலடி கொடுத்த மகள்கள்

Admin

ஆக்சிஜன் இன்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு…..

naveen santhakumar