ஜோதிடம்

நிவர் புயலுக்கும் மீம்ஸ்களை உருவாக்கி தெரிக்கவிடும் நெட்டிசன்கள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

வழக்கமாக எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் மீம்ஸ் உருவாக்கும் நெட்டிசன்கள் இந்த புயலையும் விட்டு வைக்கவில்லை.முன்பெல்லாம் மகிழ்ச்சிகரமான, காமெடி விஷயத்துக்குதான் மீம்ஸ்கள் ரெடியாகும், இப்போது அப்படி இல்லை.சீரியஸ் விஷயத்திற்கும் மீம்ஸ்கள் தயார் செய்துவிடுகிறார்கள். 

இதற்கு காரணம், அலட்சியம் இல்லை, அந்த சீரியஸ் விஷயத்தையும் கடந்து செல்லும் ஒரு வழிவகையாகவே மீம்ஸ் பார்க்கப்படுகிறது. அதனால்தான் கொடூர கொரோனாவிலும் நெட்டிசன்கள் பிரித்து மேய்ந்தனர்.இப்போது இந்த நிவர் புயலை மையமாக வைத்து 2 நாட்களாகவே சோஷியல் மீடியா முழுவதும் மீம்ஸ்கள் நிறைந்து வழிகின்றன.அவற்றுள் சில,

ஒரு வருஷத்துல ஒரு பிரச்சனை வந்தால் பரவாயில்லை, ஒரு வருஷமே பிரச்சனையா வந்தா என்ன பண்றது???” என்பன போன்ற மீம்ஸ்கள் நிவர் புயலை மையப்படுத்தி இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

வழக்கமாக வருட கடைசியில் ஏதாவது ஒரு இழப்பில் நாம் சிக்கி கொள்கிறோம்.குறிப்பாக டிசம்பர் மாதம் என்றாலே நடுநடுங்கி போகிறோம்.. அந்த வகையில் ஒரு மீம் வெளிவந்துள்ளது. அதில், “தல மழை வந்துட்டு, அடுத்த புயல் வர போது, ஒருவழியா 2020 கிளைமேக்ஸ்க்கு வந்துட்டோம்” என்கிறது ஒரு வடிவேலு மீம்.

ALSO READ  குட்நியூஸ்… வீடு திரும்பினார் வடிவேலு!

நான் நினைச்சா வலுவிழந்து ஒரிசா பக்கம் போயிடலாம்., ஆனால் நினைக்க மாட்டேன் என்கிறது ஒரு சூர்யா மீம்… “அது எவன்டா கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாததடினு ஸ்டேட்டஸ் வச்சது? என்று வடிவேலு கேட்பது போல” மற்றொரு மீமை தெறிக்க விட்டுள்ளனர்.

சென்னையில் அன்று பெருத்த வெள்ளம் வந்ததை நினைவுகூரும் வகையில், “ஒரு வருஷத்துல ஒரு பிரச்சனை வந்தால் பரவாயில்லை, ஒரு வருஷமே பிரச்சனையா வந்தா என்ன பண்றது” என்று கேட்கிறது மற்றொரு மீம்..

ALSO READ  டிரெண்டாகும் "டனுக்கு ரிட்டாக்கு ரிட்டாக்கு டும் டும்" :

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம் உருவாகி உள்ளது என்ற அறிவிப்புக்கு, “ஒரு புயல் வரும்போதே யாரும் நிவாரணம் தர வர மாட்டாங்க. இதுல இரண்டு புயல் சேர்ந்து வேற வருதா?” என்று வடிவேலு இன்னொரு மீம்ஸில் கண்ணீர் வடிக்கிறார்.

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று நம் அரசாங்கம் சொன்னதையடுத்து, மக்கள் இதுபோன்ற மீம்ஸ்களை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்தபடியே, சிதறடிக்கும் வேலையில் சோஷியல் மீடியாவில் இறங்கி உள்ளதாகவே தெரிகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இசையமைப்பாளரும்,இளம் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பிகில் பட நடிகை ஒப்பந்தம் :

naveen santhakumar

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு

News Editor

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

Admin