லைஃப் ஸ்டைல்

வருண முத்திரை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முத்திரை பயிற்சி: வருண முத்திரை

முத்திரை பயிற்சியில் இன்று நாம்
வருண முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம்.

நமது உடலில் 70 சதவீதம் நீர் இருக்கிறது.உடலில் நீர் சத்து குறைந்தால் இம்முத்திரை செய்வதன் மூலம்  நீர்ச்சத்தை அதிகரிக்கச்  செய்யலாம்.

மேலும் இப்பயிற்சியை செய்வதால்,

உடலில் நீர்ச்சத்து சமநிலை அடையும்.
கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பை  சரிசெய்யும்.
உடற் சூடு தணியும், வியர்க்குரு மறையும்.

நீர்ச்சக்தியை மேம்படுத்தக்கூடிய திசுக்கள், செல்கள்,
தசைநார்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை தூண்டும்.

ALSO READ  ஆகாஷ் முத்திரை

சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.

 தோல் வறட்சி மறைந்து, தோல் மினுமினுப்பாகும்.
தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.

 தோலிலுள்ள சுருக்கங்கள் மறைந்து
இளமையான தோற்றம் உருவாகும்.
முகப்பரு நீங்கும்.

வாய் கண் உலர்வை நீக்கும்.உதட்டில் ஏற்படும் வெடிப்புகள் சரியாகும்.
உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.செரிமானத்தை அதிகரிக்கும்.

செய்முறை:

• முதலில் ஒரு விரிப்பை விரித்து அதில்  நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும். நாற்காலியிலும் அமரலாம்.

• கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடவும்.

ALSO READ  நீங்க மஷ்ரூம் பிரியரா : வாங்க சுவையான மஷ்ரூம் சாப்பிடலாம்

• பின் சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றை ஒன்று அழுத்துமாறு வைக்கவும்.

• மற்ற மூன்று விரல்கள் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.

• மூன்று விரல்களுக்கிடையே இடைவெளி இருக்க கூடாது.

• இரு கைகளிலும் செய்யவும்.

• பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை செய்யவும்.

இந்த முத்திரையை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் செய்யலாம்.

எஸ். ராஜலெக்ஷ்மி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த டயட் மட்டும் ஒரு வாரம் ஃபாலோவ் பண்ணி பாருங்க…..நீங்களே ஆடி போவீங்க…அசந்து போவீங்க….

naveen santhakumar

விரல்களில் வித்தையை காட்டும் விதவிதமான மோதிரங்கள் :

Shobika

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் !

Admin