லைஃப் ஸ்டைல்

பாத வெடிப்பை குணப்படுத்தனுமா இதோ சில வழிகள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாத வெடிப்பு பிரச்சனை பொதுவாக நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் நாம் நிற்கும் போதோ அல்லது நடக்கும் போதோ வலிகளை ஏற்படுத்தி விடும். எளிய வீட்டு மருந்துகள் மூலமாகவே இதனை நன்கு குணப்படுத்தி விடலாம்.

Related image

பாத வெடிப்புக்கான காரணங்கள் :

Related image
  • இந்த பாத வெடிப்பு போதுமான ஈரப்பதமின்மை, முறையான பாத பராமரிப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், நீண்ட நேரம் நிற்பது மற்றும் பொருத்தமில்லாத காலணிகளை அணிவது மேலும் நீரிழிவு மற்றும் தைராய்டு போன்றவைகளும் இந்த பாத வெடிப்புக்கு காரணமாகிறது.
  • தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்.
  • வெது வெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
Related image

பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும். மிகவும் இறுக்கமான ‘‌ஷூ‘ அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

பாத வெடிப்புக்கான சில மருத்துவ முறைகள் :

1.மாம்பருப்பை பயன்படுத்தி குதிகால் வெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ALSO READ  அலர்ஜி மற்றும் புண்களை குணமாக்கும் பூண்டு சூப் செய்வது எப்படி?

செய்முறை:

Image result for மாம்பருப்பை

ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். அரைத்து வைத்திருக்கும் மாம்பருப்பு சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி ஆறவைத்து பூசிவர குதிகால், உள்ளங்கால் மற்றும் கைகளில் ஏற்படும் வெடிப்பு சரியாகும்.

2. வேப்பிலையை பயன்படுத்தி குதிகால் வெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.

செய்முறை:

Related image

வேப்பிலையை அரைத்து இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, வெடிப்பு உள்ள இடத்தில் தினமும் பூசிவர குதிகால் வெடிப்பு சரியாகும்.

3. சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி பாத வெடிப்பை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

செய்முறை:

Image result for சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையின் சதை பகுதியை எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சவும். பின் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பூசிவர பாதவெடிப்பு, சேற்றுப்புண் சரியாகும்.

4. தேன்

செய்முறை:

Image result for தேன்

அரை பக்கெட் இளம் சூடான நீரில் ஒரு கப் தேன் கலந்து, பின் இதில் கால்களை ஒரு 15-20 நிமிடங்கள் நன்கு மூழ்கி இருக்குமாறு செய்ய வேண்டும். பின் பாதங்களை மென்மையாக தேய்த்து விட்டால் பாதங்கள் மிருதுவாகும். இதை அடிக்கடி செய்து வர பாத வெடிப்பு விரைவில் மறைந்து விடும்.

ALSO READ  வீட்ல இந்த செடிகள் இருந்தா அதிர்ஷ்டம் தான்... உங்க வீட்ல இருக்கா?

5. அத்திமரப்பட்டை பாதவெடிப்பை சரிசெய்கிறது

செய்முறை:

Image result for அத்தி

மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பாதவெடிப்பு உள்ள இடத்தில் இரவு நேரத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து காலையில் கழுவிவர பாதவெடிப்பு சரியாகும். இந்த மருந்துகளை பயன்படுத்தும் முன்பு இளம்சூட்டில் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும்.

6. ஆமணக்கு இலை

செய்முறை:

Image result for ஆமணக்கு இலை

ஆமணக்கு இலை, சீந்தில்கொடி, குப்பை மேனி ஆகிய மூன்றையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை இரவு படுக்கப் போகும் முன்நர் பாதத்தைச் சுத்தமாக தேய்த்துக் கழிவிய பின்னர் பாதங்களில் தடவிக் கொள்ள வேண்டும். இதனை சில நாட்கள் செய்து வந்தாலே நல்ல பலன் தெரியும்.

காலணிகள்

Related image

உங்களது பாதங்களுக்கு ஏற்ப சரியான அளவு காலணிகளை பயன்படுத்துவதன் மூலமாக பாதங்களில் பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம். மேலும் குளித்து முடித்ததும், பாதங்களில் ஈரத்தன்மை இல்லாதவாறு சுத்தமாக துடைத்து உலர்த்தி விட வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடேங்கப்பா….! ரப்பர் ஷூவின் விலை ₹ 40,000…! 

naveen santhakumar

அதிகாலையில் எழுந்து கொள்ள ஆசையா?

Admin

காதலர் தின பரிசு குறித்த லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்….போலீசார் எச்சரிக்கை….

naveen santhakumar