லைஃப் ஸ்டைல்

விளக்கெண்ணெயின் வியக்கவைக்கும் பலன்கள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மருத்துவ குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெய் பாரம்பரியமான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச்செல்லும் முன் கண்களை சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண்எரிச்சல் குணமாகும்.

குளிப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக்கூறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு || Castor oil beauty tips

விளக்கெண்ணெய்யில் உள்ள ரிகினோலிக் அமிலம் சருமத்தில் உள்ள வீக்கம் புண்களை குணமாக்கும் சக்தி படைத்தது. சருமத்தில் ஏற்டும் சிவப்பு, தடிப்பு அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும் , பூஞ்சை தொற்றுக்கும் , விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் விளக்கெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.

ALSO READ  காபி குடிப்பதால் பெண்களுக்கு இவ்வளவு பிரச்சனையா ??????

2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில் சுத்த்மான பருத்தி துணியை நனைத்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

நல்லெண்ணெய் குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் || Healthy Sesame oil  Nallennai oil bath

நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்யை சமஅளவு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்கு தடவி வருவதால் உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும, மினுமினுப்புடனும் இருக்கும்.

விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும்.

ALSO READ  மாய்ஸ்சுரைசரை(moisturiser) அதிகம் பயன்படுத்தலாமா…????

விளக்கெண்ணெய்யில் உள்ள ஓமேகா 9 கொழுப்பு அமிலம் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து கூந்தலின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.

oil massage for hair: கூந்தல் பொலிவுக்கும் சரும மினுமினுப்புக்கும் ஏற்ற  எண்ணெய் மசாஜ் எப்படி செய்யணும்.. - Samayam Tamil

தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இமைகள் அழகு பெறும்.பாதங்களில்ல வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச்செல்வதற்கு முன் வெடிப்புகளின் விளக்கெண்ணெய்யை தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடலை வலுவாக்கும் ‘பிளாங்க்’ பயிற்சி :

Shobika

அடக்கொடுமையே!!… தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பது இவ்வளவு பேரா?

naveen santhakumar

நம்ம சென்னைக்கு வந்தாச்சு ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் பைக்..!!!

naveen santhakumar