லைஃப் ஸ்டைல்

பன்னீர் ரோஜாவின் பலன் தரும் பயன்கள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முகத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது ரோஜா மலர். இதன் இதழ்களில் அடங்கியுள்ள வைட்டமின்-C, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின் அழகை பராமரிக்க ரோஜா இதழ்களை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.

*வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல 2 பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,

*கருப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் ரோஜா ஒரு டீஸ்பூன் தேன் அரை டீஸ்பூன் கலந்து உதடுகளின் மேல் பூசி வரலலாம்.

ALSO READ  ஓஹோ...ஆண்கள் தாடி வளக்குறதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் ஒளிஞ்சிருக்கா...?????

*அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

*வியர்வை நாற்றம் உள்ளவர்கள் பன்னீர் ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

*வெயில் காலத்தில் முகத்தில் திட்டுத்திட்டாக தோன்றும் கருப்பான பகுதிகளில் ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, தேவையான அளவு காய்ச்சாத  பால் ஆகியவற்றை அரைத்து பேக் போல முகத்தில் தடவலாம்.

ALSO READ  வோடஃபோனின் ரூ.500 கீழான பீரிபெய்டு திட்டங்கள்.

மேற்கண்ட எளிய பராமரிப்புகளுக்கு நாட்டு பன்னீர் ரோஜா வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹைப்ரிட் வகை ரோஜாவை பயன்படுத்தக்கூடாது. பன்னீர் ரோஜா செடிகளை வீட்டு தோட்டத்திலோ அல்லது தொட்டிகளிலோ வளர்க்கலாம். முகத்துக்கு பொலிவு அளிப்பது மட்டுமின்றி தினமும் பன்னீர் ரோஜாப்பூ இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீட்ல இந்த செடிகள் இருந்தா அதிர்ஷ்டம் தான்… உங்க வீட்ல இருக்கா?

Admin

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் !

Admin

விரைவில் மாதவிடாய் வரவைப்பதும்? தாமதப்படுத்துவது எப்படி?

naveen santhakumar