லைஃப் ஸ்டைல்

பெண்களே உங்களுக்கு மீசை முடி வளர்கிறதா?????உடனே இந்த எளிய வீட்டு வைத்தியத்தை செய்யுங்க….அப்புறம் பாருங்க மேஜிக்க…..!!!!!!

உடலில் மற்ற இடங்களை காட்டிலும் முகத்தில் தெரியும் முடிகள் அழகை கெடுக்க செய்யும். இயற்கை பொருள்களை பயன்படுத்தும் போது அது முடியை நீக்குவதோடு முடி வளர்ச்சியையும் குறைக்க செய்யும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் காலப்போக்கில் நிரந்தரமாகவே முடியை நீக்கும்.ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பராமரிப்பு என்று மேற்கொள்பவர்கள் இயற்கையாகவே முடியை அகற்ற உதவும் வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

​*மஞ்சளுடன் பால் – மீசை முடி அகற்ற

சிறிய கிண்ணம் ஒன்றில் 1 டீஸ்பூன் மஞ்சள் எடுத்து 1டீஸ்பூன் பாலுடன் கலந்து நன்றாக குழைக்கவும். பேஸ்ட் போல் குழைத்த இந்த கலவையை உதட்டில் மெதுவாக ஸ்க்ரப் போல் மசாஜ் செய்தபடி தடவுங்கள்.20 நிமிடங்கள் வரை விட்டு நன்றாக உலர்ந்ததும் காட்டன் பாலை கொண்டு நன்றாக துடைத்து மீண்டும் மசாஜ் செய்து முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் தேய்த்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். முடி உதிரும் வரை தினமும் ஒரு முறை இதை செய்து வரலாம்.

​*முட்டையின் வெள்ளைக்கரு – மீசை முடி அகற்ற

முட்டையின் வெள்ளைக்கருவுடன் அரை டீஸ்பூன் சோளமாவு கலந்து நன்றாக சேர்க்கவும். பிறகு சர்க்கரை சேர்த்து மென்மையான பேஸ்ட் பதத்துக்கு குழைத்து விரல்களால் உதடு முழுக்க தடவி விடவும்.20 நிமிடங்கள் வைத்திருந்து உலர்ந்ததும் முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் அதை தேய்த்து சுத்தம் செய்யவும். இது உரிக்க உரிக்க தோல் போன்று முடியோடு சேர்ந்து வரும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். முடி உதிரும் வரை வாரம் மூன்று நாட்கள் இதை செய்து வரலாம்.

​*எலுமிச்சையும் சர்க்கரையும் – மீசை முடி அகற்ற

எலுமிச்சை சாறு 2 டீஸ்பூனை எடுத்து அதனுடன் 8 முதல் 9 டீஸ்பூன் வரை தண்ணீர் விட்டு நன்றாக கலக்க வேண்டும். பிறகு இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கலக்கவும். இது நன்றாக சேர்ந்து குமிழ்கள் போல் கொதிக்கும் வரை இந்த கலவையை சூடாக்கி இறக்கவும்.வெதுவெதுப்பான அல்லது மந்தமான சூட்டுக்கு பிறகு அதை உதட்டில் தடவி 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து உதட்டின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.

​*தேனும் எலுமிச்சையும் – மீசை முடி அகற்ற

தேன் முடியின் வளர்ச்சியை தடுக்க கூடும். தேன் இரண்டு டீஸ்பூன் எடுத்து அதனுடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாக கலக்க தொடங்குங்கள். அடுப்பில் மிதமானத்தீயில் வைத்து லேசாக சூடேற்றவும். பேஸ்ட் மிகவும் இருக்கமாக இருந்தால் அதனுடன் லேசாக தண்ணீர் விட்டு இறக்கி குளிர விடவும்.இப்போது சோளமாவு விரலில் தொட்டு உதட்டின் மேல் தடவி அதன் மீது பேஸ்ட்டை முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் தடவி விடவும். இப்பொது மெல்லிய பருத்தி துணியை அதன் மேல் ஒட்டி முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் வேகமாக இழுக்கவும். சற்று வலி இருக்கும் என்றால் அதிக உபாதை தராது. தேன் வறட்சியை தவிர்க்க உதவும் என்பதோடு சருமத்தை நீரேற்றமாக வைக்கவும் உதவும்.

​*ஓட்ஸ் உடன் வாழைப்பழம் – மீசை முடி அகற்ற

ஓட்ஸ் உடன் பழுத்த வாழைப்பழம் சேர்த்து நன்றாக கலந்து இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடங்களில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் இடங்களில் தடவி மசாக் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். ஓட்ஸ் சிறந்த ஹைட்ரேட்டிங் ஸ்க்ரப் போன்று செயல்படும்.

*​உருளைக்கிழங்கும் பருப்பு கலவையும்

இந்த பேக் தயாரிப்புக்கு சில நேரங்கள் ஆகும் என்றாலும் இதன் பலனும் சீராக கிடைக்கும்.

தேவை

எலுமிச்சைச்சாறு -5 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

உருளைக்கிழங்கு – 1 சிறியது

பாசிப்பயறு – 3 டீஸ்பூன் ( முன் தினம் இரவு ஊறவைத்துவிட வேண்டும்)

பருப்பை மைய அரைத்து அனைத்து பொருள்களையும் சேர்த்து 20 நிமிடங்கள் வரை இந்த கலவையை தடவி விடவும். இவை நன்றாக காயும் வரை உலரவிட்டு பிறகு முடி வளர்ச்சிக்கு எதிர்திசையில் துடைத்து எடுத்தால் முடி வளர்ச்சியும் குறையும்.

Related posts

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா…. இத try பண்ணுங்க…

Admin

இலவங்கப் பட்டை – தேன் மருத்துவ குணங்கள்

Admin

நீங்கள் பயணத்தை விரும்புகிறவர்களா? இந்தியாவின் நீண்ட ரயில் பயணங்கள்

Admin