லைஃப் ஸ்டைல்

கொரோனாவால் செழிக்கும் கிருமிநாசினி வர்த்தகம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து கிருமிநாசினிகளின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் பெரும்பாலும் நோய்கள் கைகள் வழியாகத்தான் பரவுகிறது, இதனை கட்டுப்படுத்த கிருமிநாசினிகள் பயன்படுகின்றன .இதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சந்தைகளில் இந்த கிருமிநாசினிகள் ஸ்ப்ரே, ஜெல், சோப் மற்றும் ஃபோம் போன்ற வகைகளில் கிடைக்கிறது.

உலகச் சந்தையில் கிருமிநாசினிகள் வர்த்தகம் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. இந்தியாவில் சராசரியாக 400 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.

ALSO READ  பல சிக்கல்களை கடந்து சிக்கென்று சீறி வந்த சிக்னல் ஆப் :

இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோத்ரேஜ், டாபர், ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

பொதுவாக இந்த சானிடைஸர் விற்பனையில் ஜெல் வகை அதிக அளவில் விற்பனையாகிறது, கிட்டத்தட்ட 52% இந்த ஜெல் டைப் சானிடைஸர் விற்பனையாகிறது.

இதையடுத்து ஃபோம் டைப் விற்பனையாகிறது. இது கிட்டத்தட்ட 30% அளவுக்கு விற்பனையாகிறது.

இதில் ஸ்பிரே வகையைச் சானிடைஸர்கள் 14 சதவீதம் வரை விற்பனையாகின்றன.

சோப்பு போன்ற மற்ற வகைகள் கிட்டத்தட்ட நான்கு சதவீதம் அளவுக்கு விற்பனையாகிறது

பெரும்பாலும் மருத்துவமனைகளில் தான் கிருமிநாசினிகள் பயன்பாடு அதிகம் உள்ளது, கிட்டத்தட்ட 38 சதவீதம் அளவிற்கு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ALSO READ  அரிசி சாதத்தால் நீரிழிவு நோய் அதிகரிப்பா? -அதிர்ச்சி தகவல்

அதற்கு அடுத்தபடியாக உணவு விடுதிகளில், ஹொட்டல்களில் 28 சதவீதம் அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது

கல்வி நிலையங்களை பொருத்தவரையில் கிட்டத்தட்ட 20% சரி அவர்கள் பயன்பாடு உள்ளது.

தற்போது வீடுகளிலும் இந்த சானிடைஸர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. வீடுகளில் கிட்டத்தட்ட 12 சதவீதம் அளவிற்கு பயன்படுத்த படுகின்றன

இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்டிசெப்டிக் சானிடைஸராக டெட்டால் உள்ளது. இது கிட்டத்தட்ட 75% இந்திய சந்தையை ஆக்கிரமித்து உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது சாவ்லான்.

உலகம் முழுவதும் சராசரியாக 6 பில்லியன் மக்கள் நோய் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 9 (ஆசிரியர்)

News Editor

பெண்களே உங்களுக்கு மீசை முடி வளர்கிறதா?????உடனே இந்த எளிய வீட்டு வைத்தியத்தை செய்யுங்க….அப்புறம் பாருங்க மேஜிக்க…..!!!!!!

naveen santhakumar

சில மனிதர்கள்… சில நினைவுகள்(மாணவர்களின் வழிகாட்டி)…பகுதி 14…

naveen santhakumar