லைஃப் ஸ்டைல்

பெண்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைல்கள்’…!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெண்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமாக அணிகலன்கள், ஒப்பனை செய்வதற்கு மெனக்கெடுவார்கள். இப்போது அணியும் ஆடைகளுக்கு பொருத்தமாக சிகை அலங்காரம் செய்வதும் பேஷனாகிவிட்டது. அதற்கேற்ப விதவிதமான ‘ஹேர் ஸ்டைல்கள்’ புழக்கத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பாரம்பரிய புடவை, சுடிதார், மார்டன் உடைகள் அணியும்போது எந்த மாதிரியான ஹேர்ஸ்டைலை பின்பற்றினால் பார்க்க அழகாக இருக்கும் என்பது பற்றிய தொகுப்பு இது.

தளர்வான கொண்டை அலங்காரம்:

‘ரப் பன்’ எனப்படும் இந்த சிகை அலங்காரத்தை எளிதாக மேற்கொள்ளலாம். வழக்கமாக கொண்டை அலங்காரம் செய்யும்போது கூந்தல் முடி முழுவதையும் இறுக்கமாக சுற்றி முடிச்சு போட வேண்டியிருக்கும். இந்த அலங்காரத்தில் கொண்டை முடியை தளர்வாக வைத்திருந்தாலே போதுமானது.

பக்கவாட்டு சிகை அலங்காரம்:

பாரம்பரிய அலங்காரத்தில் ஸ்டைலான தோற்றத்தை பெற விரும்பினால், ‘சைடு ஹேர்’ எனப்படும் இந்த வகை சிகை அலங்காரத்தை முயற்சிக்கலாம். கூந்தலை பின்னாமல் ஒரு பக்கமாக தளர்வாக தொங்கவிட வேண்டும். இந்த சிகை அலங்காரத்துக்கு கனமான காதணிகளை அணிய வேண்டும்.

குதிரை வால்:

கூந்தல் ஸ்டைலாக தோற்ற மளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ‘போனி டைல்’ எனப்படும் குதிரை வால் சிகை அலங்காரத்தை பின்பற்றலாம். பின்னந்தலையின் நடுப்பகுதியில் வால் போல் ஸ்டைலாக கூந்தலை சீவி விட வேண்டும். புடவை மற்றும் சுடிதாருக்கு இந்த மாதிரியான ஸ்டைல் நன்றாக இருக்கும்.

ALSO READ  ஒவ்வொன்றும் ஒருவிதம்...பளபளக்கும் பட்டு பாவாடைகள் பலவிதம்....

ஸ்டெப் ஹேர்:

பாரம்பரிய உடையிலும் எளிமையாக காட்சியளிப்பதற்கு இந்த சிகை அலங்காரம் பொருத்தமாக இருக்கும். அதிக கனம் இல்லாத மென்மையான தன்மை கொண்ட ‘ஷிப்பான்’ போன்ற ஆடை அணியும்போது தலைமுடியை தளர்வாக விட்டுவிட்டு அடிப்பகுதியில் இருக்கும் முடியை வெட்டிவிட வேண்டும். கூந்தல் முழுவதையும் முன்புறமாக தொங்கவிடவும் வேண்டும்.

அலை கூந்தல்:

‘வேவ்ஸ்’ எனப்படும் அலை அலையாக வருடியபடி சுருள் சுருளாக நீளமாக இருக்கும் இந்த கூந்தல் அலங்காரத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை. நேர்த்தியாக புடவை அணிந்து, கூந்தலை பின்னாமல் தலைமுடியை தளர்வாக விட்டுவிடலாம். கூந்தலின் முனைப்பகுதியில் மட்டும் ‘சீரம்’ போன்ற ஜெல்லை தடவினால் போதும். பார்க்க அழகாக இருக்கும்.

பின் ஹேர்:

பாரம்பரிய உடையில் அழகாக காட்சியளிப்பதற்கு, கூந்தலை ஜடை பின்னாமல் தலைப்பகுதியையொட்டியபடி கிளிப் அணிந்தால் போதும். மங்திகா போன்ற ஆடை அணிந்திருந்தால் இந்த ஹேர்ஸ்டைல் சூப்பராக இருக்கும்.

ஆடைகளுக்கு பொருத்தமான சிகை அலங்காரம்

நேரான முடி:

தலை முடியை நேராக்குதல் vs மிருதுவாக்குதல் (Straightening Vs Smoothening):

கூந்தலை எளிமையாக பராமரிக்க விரும்புபவர்கள் இந்த கூந்தல் அலங்காரத்தை பின்பற்றலாம். சீப்பை கொண்டு தலைமுடியை நேராக இழுத்து அப்படியே தளர்வாக விட்டுவிட்டால் போதும். உச்சந்தலையின் நடுப்பகுதியில் உச்சி எடுத்து கூந்தலை இரு பகுதியாக பிரித்துவிட்டுவிட வேண்டியதுதான்.

தோள்பட்டை:

இரு தோள்பட்டை பகுதிகளையும் மூடிய நிலையில் கூந்தலை ஸ்டைலாக முன் பகுதியில் தொங்க விடும் அலங்காரம் இது.

ALSO READ  நகை,ஜவுளிக்கடை திறக்கப்படுமா..??? நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை...

சைடு கர்ல்ஸ்:

25 Side curls hairstyles ideas | long hair styles, wedding hairstyles, hair  styles

கூந்தலை ஜடை பின்னுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த முடியையும் முன்புறத்தில் ஸ்டைலாக தொங்க விட வேண்டும். கூந்தலின் முனைப் பகுதியில் முடியை சுருள் சுருளாக காட்சிப்படுத்தினால் பார்க்க அழகாக இருக்கும்.

கொண்டை அலங்காரம்:

அனைத்து முடி நீளங்களுக்கும் ஸ்டைலிஷ் மற்றும் சிக் மெஸ்ஸி பன் சிகை  அலங்காரங்கள் | Be Beautiful India

இதனை அனைத்து வயது பெண்களும் விரும்புவார்கள். பாரம்பரிய அலங்காரத்தில் இது நேர்த்தியானது. கனமான சேலை அல்லது லெஹெங்கா அணிந்திருந்தால் கூந்தலை சுருட்டி கொண்டை போட்டு பேண்டு அல்லது கிளிப் அணிந்து கொள்ளலாம்.

ஒரு பக்க பின்னல்:

ஒரு அழகான pigtail உங்களை பின்னால் எப்படி. எப்படி பின்னால் பிக்டெய்ல்:  புகைப்படங்கள் மற்றும் திட்டங்கள். கோசா நான்கு வரிசைகளில்

கூந்தலை நன்றாக ஜடை பின்னிக்கொள்ள வேண்டும். பின்புறத்தில் ஜடையை தொங்க விடுவதற்கு பதிலாக முன் புறத்தில் ஏதாவது ஒரு பக்கவாட்டு பகுதியில் ஸ்டைலாக தொங்கவிட வேண்டும்.

சைடு ஸ்வெப்ட் ஹேர்:

40 Side-Swept Bangs to Sweep You off Your Feet

சல்வார் அல்லது குர்தி போன்ற ஆடை அணியும்போது இந்த சிகை அலங்காரம் செய்யலாம். இது எளிமையானது. கூந்தல் முடியை இரண்டாக பிரித்து முன்புறத்தில் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் தொடங்கவிட்டால் போதும்.

காமைன் ஹேர்:

Latest Hairstyles For Girls With Short, Medium & Long Hair | magicpin blog

ஆண்களை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஹேர் ஸ்டைல் இது. தலைப்பகுதியை ஒட்டியவாறு கூந்தலை முழுவதும் வெட்டவேண்டியிருக்கும் என்பதால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே இந்த ஹேர் ஸ்டைலை பின்பற்றுகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிறந்த குழந்தைங்க கிட்ட இவ்வளவு விஷயம் இருக்கா??

naveen santhakumar

அடக்கொடுமையே!!… தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பது இவ்வளவு பேரா?

naveen santhakumar

ஆண்களே உஷார்….!!!!!இனிமே வெந்நீரில் குளிக்காதீங்க……

naveen santhakumar