லைஃப் ஸ்டைல்

குளிர் காலத்தில் நம் காதுகளை எவ்வாறு பாதுகாக்கலாம்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குளிர்காலம் தொடங்கி விட்டது. இனிமேல் இரண்டு மாத காலத்திற்கு நம்மை வாட்டி வதைக்க போகும் குளிரிலிருந்து எப்படி தப்பிக்க போகிறோம் என்ற பயம் பலபேரிடம் எழும். குளிர் கால நோய்களான காய்ச்சல் இருமல் மற்றும் காதுவலி போன்றவற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவே நமக்கு நேரம் சரியாக இருக்கும். காய்ச்சல் இருமல் போன்ற உடல்நலக் குறைவு சில நாட்களில் குணமாகும். ஆனால் காதுகளில் ஏற்படும் வலி குளிர் காலம் முடியும் வரை நம்மை ஒரு வழி செய்துவிடும்.

குளிர்காலத்தில் நாம் பயணம் செய்யும்போது நம் காதுகளில் உள்ள நரம்புகளில் ஏற்படும் நெகிழ்வுத் தன்மை காரணமாகவே காதுகளில் வலி போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வெளியில் செல்லும்போது நம் காதுகளை சிறிய வகையான துணிகளால் காற்று புகாதவாறு நன்றாக மூடி கொள்ள வேண்டும். அதேபோல் பால், கோதுமை, முட்டை, போன்றவை சேர்க்கப்பட்ட பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது காது தொற்றுக்கு மிக முக்கிய காரணம். எனவே அதனை தவிர்த்தல் மிகவும் நல்லது. அதற்கு பதிலாக பழங்கள் காய்கறிகள் என தினமும் நம் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.

குளிர் காலத்தில் நமக்கு அடிக்கடி ஜலதோஷம் ஏற்படும். இப்படி ஏற்படும்போது மூக்கில் வடியும் நீரை வேகமாகச் சிந்தக்கூடாது. அது காதுகளில் நரம்புகளை பாதித்து நமக்கு வலிகளை உண்டாக்கும்.அதேபோல் குளிர்காலத்தில் காதுக்குள் மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் நிலைகளில் நீச்சல் அடிப்பவர்கள் குளித்து முடித்த பின் தங்கள் காதுகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

ALSO READ  பழங்குடி ஆடை, அணிகலனுக்கு மாறும் பெண்கள்

காதுகளில் வலி ஏற்பட்டால் தலைக்கு கீழ் இரண்டு தலையணைகளை வைத்து சாய்த்தவாறு வறுத்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்த நிலையில் தலை சாய்த்து காதுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. அதேபோல சூடான உணவுப் பொருள்களை உண்ண வேண்டும் குளிர்ந்த நீரையோ குளிர்ந்த உணவுப் பொருட்களையும் அடிக்கடி குடிக்க கூடாது. குளிக்கும்போது காதுகளில் பஞ்சு வைத்துக் கொண்டு குளித்தால் காதுகளில் நீர் புகாமல் தடுக்க முடியும்.

காதுகளில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காரணம் காதுகளில் ஏற்படும் பிரச்சனை தொண்டை மூக்கு போன்றவற்றை பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதால் உடனடியாக தகுந்த சிகிச்சை எடுப்பது நமக்கு நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கழுத்தின் கருமையை போக்க பயனுள்ள குறிப்புகள் :

Shobika

விவாத பொருளான ட்ரம்ப் மகள் இவாங்காவின் ஆடை

naveen santhakumar