லைஃப் ஸ்டைல்

இந்த தவறையெல்லாம் ஜாக்கிங்கின்போது செய்யாதீர்கள் ……………

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜாக்கிங் பயிற்சியின் மூலம் உடல் எடை குறைப்பது தான் உங்கள் நோக்கம் என்றால், நீங்கள் ஜாக்கிங்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லை எனில் நீங்கள் ஓடும் போது தவறு செய்கிறீர்கள் என்று பொருள். இந்த மாதிரி தவறுகள் சாதாரணம் தான். அதுவும் ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் தவறுகள் செய்வதற்கு அதிக வாய்ப்புகளுண்டு.

*ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் உற்சாக மிகுதியால் வேகமாக ஓடினால் நல்லது என்று நினைத்து கொண்டு வேகமாக ஓடுவார்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது. இப்படி ஓடுவதால் முழங்காலுக்கு கீழும் கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன்பகுதியில் வலி ஏற்படும். அல்லது தொடை எழும்பின் கீழ்பகுதியும் முழங்காலும் சந்திக்கும் இடத்தில் முன்புறம் அல்லது பின்புறம் வலி ஏற்படும். அல்லது முழங்காலின் பக்கவாட்டில் வலி ஏற்படும். இவ்வாறு இவற்றில் ஏதோ ஒரு வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மெதுவாக தான் உங்கள் வேகத்தையும் , தூரத்தையும் அதிகரிக்க வேண்டும் .

*ஜாக்கிங் பயிற்சியின் போது சரியான முறையில் சுவாசிக்க வேண்டும். இல்லையெனில் மூச்சு திணறல் மற்றும் நிறைய ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே ஜாக்கிங்பயிற்சியின் போது வாய் மற்றும் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுங்கள் . இப்படி சுவாசிக்கும் போது தேவையான அளவு பிராணவாயு நமக்கு கிடைக்கும். இல்லையெனில் ஓடும் போது அடிவயிறு மேல்நோக்கி தரும் அழுத்தத்தாலும் நுரையீரல் கீழ் நோக்கி தரும் அழுத்தத்தாலும் உதரவிதானத்திற்கு (diaphragm) குறைவான அளவே ரத்தம் பாயும். இதனால் தசை பிடிப்பு ஏற்படும்.

ALSO READ  இந்தியா முதல் உலக நாடுகள் வரை : பிரியாணி தான் !

*ஓடும் போது எந்த துணி அணிகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் சிலர் அதிக துணி அணிவார்கள்.வேறு சிலர் குறைவான துணிகளையே அணிவார்கள். இது பருவநிலை சார்ந்த நோய்களுக்கு நம்மை ஆட்படுத்தக்கூடும். எனவே ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளும் போது பருவநிலைக்கு தகுந்தாற்போல உடை அணியுங்கள்.

*ஓடும் போது மேலுடம்பு சரியாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் சிறிது தூரம் சென்றதும் முதுகு கூன் போட்டு விடும். அப்படி இல்லாமல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு ஓட வேண்டும். அதே போல கையை முழங்கை ஆரம்பிக்கும் இடத்தில் மடக்கி 90 டிகிரி கோணத்தில் இடுப்புக்கு பக்கவாட்டில் வைத்து கொள்ளுங்கள். ஓடும் போது கை முன்னும் பின்னும் செல்லுமாறு பார்த்து கொள்ளுங்கள்.

ALSO READ  வேப்பங்குச்சி விலை 500ரூபாய்!

*தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள் . இல்லையெனில் உடல் ஆரோக்கியம் குன்றும் . அதாவது நம் உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையெனில் மயக்கம் அல்லது தலைவலி ஏற்படும். மேலும் உற்சாகமாக வேலை செய்ய முடியாது. எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். அதேபோல ஜாக்கிங்பயிற்சி முடித்த பின்னரும் கூட தவறாமல் தண்ணீர் அருந்துங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செந்தில் தொண்டமான் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய தமிழ்நாட்டு மக்கள்!

Shanthi

சில மனிதர்கள்… சில நினைவுகள்(மாணவர்களின் வழிகாட்டி)…பகுதி 14…

naveen santhakumar

உடை அணிவதில் பருமனான தேகம் கொண்டவர்களுக்கான சில டிப்ஸ் :

Shobika