லைஃப் ஸ்டைல்

உங்க ஃபோன்ல நெட் ஸ்லோவா??????வேகத்த அதிகரிக்க இதை டிரை பண்ணுங்க…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அனைத்து ஸ்மார்ட்போன்களும் 4ஜி ஆதரவுடன் தான் வருகின்றன, ஆனால் பலரும் நெட்வொர்க் சிக்கலால் வருத்தப்படுகிறார்கள். 4ஜி நெட்வொர்க் நகரங்களில் சிறப்பாக உள்ளது. ஆனால் கிராமத்தில் இன்னும் மோசமாக தான் உள்ளது. 

நெட்வொர்க் 3 ஜி அல்லது 4 ஜி ஆக இருந்தாலும், இணைய வேகம் நன்றாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் 4ஜி நெட்வொர்க் கிடைத்தும் வேகமில்லாமல் இருந்தால் அதைவிட இணையவாசிகளுக்கு எரிச்சலான விஷயம் எதுவும் இல்லை. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 4 ஜி நெட்வொர்க்கின் வேகத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

உங்கள் இணையம் மெதுவாக இயங்கினால், முதலில் தொலைபேசியின் அமைப்புகளைச் (Settings) சரிபார்க்கவும். தொலைபேசியில், Settings> Network Settings க்குச் சென்று preferred network type எனும் விருப்பத்தில் 4G அல்லது LTE என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ALSO READ  சைவப் பிரியர்களுக்கு ‘கே.எஃப்.சி’-யின் குட் நியூஸ்!

நெட்வொர்க் அமைப்புகளில் Access Point Network (APN) அமைப்பையும் சரிபார்க்கவும், ஏனெனில் வேகத்திற்கு சரியான APN இருப்பது அவசியம். APN அமைப்புகளின் மெனுவுக்குச் சென்று default setting ஐ அமைக்கவும்.

இது தவிர, தொலைபேசியில் சமூக ஊடக செயலிகளிலும் (social media) சில அமைப்புகளை மாற்றுங்கள். பேஸ்புக்(facebook), ட்விட்டர்(twitter) மற்றும் இன்ஸ்டாகிராம்(instagram) போன்ற பயன்பாடுகள் அதிக தரவைப்(data) பயன்படுத்தி வேகத்தைக் குறைக்கக்கூடும். இது போன்ற சமயங்களில் அவற்றின் Settings க்குச் சென்று ஆட்டோ-பிளே(auto-play) வீடியோ விருப்பத்தை ஆஃப் செய்ய வேண்டும். மேலும், தொலைபேசியின் உலாவியை Data Saver பயன்முறையில் அமைக்க வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மன உணர்வை வெளிப்படுத்தும் எமோஜிக்கள்!!

Admin

அரிசி சாதத்தால் நீரிழிவு நோய் அதிகரிப்பா? -அதிர்ச்சி தகவல்

Admin

கண் பார்வைக்கு சிறந்தது முட்டைக்கோஸ்

Admin