லைஃப் ஸ்டைல்

இனி அக்கவுண்ட் தொடங்க செல்ஃபி வீடியோ கட்டாயம் – அதிரடி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் இனி செல்ஃபி வீடியோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இனி செல்பி இருந்தால் தான் இன்ஸ்டாகிராம் உபயோகிக்க முடியும் - ஷாக்கான  பயனர்கள்!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் உள்ளனர். குறிப்பாக திரையுலக, அரசியல் பிரபலங்கள் அதில் கணக்கு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இனிமேல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் செல்பி வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது பயனர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  குவியும் பயனர்களின் புகார்கள்...! வாய் திறக்காத இன்ஸ்டாகிராம் நிறுவனம்..!

தலையை வெவ்வேறு திசைகளில் திரும்பியபடி ஒரு சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராம் கேட்கும். இந்த வீடியோ செல்ஃபிகள் பின்தளத்தில் சேமிக்கப்படாது மற்றும் 30 நாட்களில் நீக்கப்படும். பதிவேற்றும் வீடியோ செல்ஃபிகள் ஒருபோதும் பிளாட்ஃபார்மில் காட்டப்படாது.

இன்ஸ்டாகிராமின் புதிய அறிவிப்பு..! - ARASIYAL TODAY

பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க மாட்டோம் அல்லது நிறுவனத்தின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ALSO READ  பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது

இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய நபரின் அடையாள சரிபார்ப்புக்கு இந்த புதிய முறை உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500cc பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்

Admin

நைட் இந்த டைம் சாப்பிட்டா உடல் எடை குறையுமாம் தெரியுமா?

Admin

மங்களகரமான முகத்திற்கு மஞ்சள் பேக் :

Shobika