லைஃப் ஸ்டைல்

காஞ்சிபுரம் இட்லி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேவையான பொருட்கள்‌:

புழுங்கல் அரிசி-1கப்
பச்சை அரிசி-1 கப்
உளுத்தம் பருப்பு-1 கப்
நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா-1சிட்டிகை
சுக்குத்தூள்-1/4 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு -1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன்
கடலைப்பருப்பு-2 ஸ்பூன்
மிளகு-1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல்-2 ஸ்பூன்
இஞ்சி-1 துண்டு
கருவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு-10 எண்ணிக்கை

செய்முறை:

ALSO READ  நீங்கள் இப்படி சாப்பிடுபவராக இருந்தால்….. நிச்சயம் உங்கள் வீட்டில் தரித்திரம் கங்ணம் ஸ்டைலில் நடனமாடும்:

அரிசி மற்றும் பருப்பை  நன்கு கழுவி நல்ல நீரில்  2  மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு நன்றாக கழுவி சற்று கரகரப்பாக அரைத்து எடுத்து தேவையான உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.

இந்த மாவை எட்டு முதல் பத்து மணி நேரம்வரை புளிக்க வைக்கவும்.

மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
முந்திரி பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து தனியே  வைக்கவும்.

ALSO READ  நெருப்பு டா...!!!அனல் பறக்கும் நெருப்பு தோசை....!!!

கரண்டியில் நெய்விட்டு சூடாக்கி, உடைத்த மிளகு,  சீரகம், முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் கலக்கவும்.

பிறகு சுக்குப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, பாதியளவுக்கு மாவை ஊற்றவும்.

இந்தத் தட்டை ஆவியில் வேக வைக்கவும்.

ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி  சட்னியுடன் பரிமாறவும்.

எஸ். ராஜலெஷ்மி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

Shanthi

பாதிப்புகளிலிருந்து கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள் :

naveen santhakumar

உடல் எடையை குறைக்க உதவும் வெந்தய டீ

Admin