லைஃப் ஸ்டைல்

முத்திரைப் பயிற்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முத்திரைப் பயிற்சி என்பது உடல், மனம் சார்ந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.

இது கைகளால் செய்யப்படும் ஒரு பயிற்சியாகும்.பஞ்சபூதங்களும் அதன் இயக்கங்களும்  இதன் அடிப்படை தத்துவங்களாகும். நமது ஒவ்வொரு விரலும்  பஞ்சபூத தத்துவங்களுடன்  தொடர்புடையது.

பெருவிரல் நெருப்பையும், ஆட்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீர் தத்துவத்தையும் குறிக்கிறது. நமது முழு உடலையும்  இயக்குகின்ற ஆற்றல்  ஒவ்வொரு விரல் நுனியிலும்  அமைந்துள்ளது.

ALSO READ  வருண முத்திரை

பஞ்சபூதங்களின் சமநிலை  கெடுவதால் உடலில்  நோய்கள் ஏற்படுகின்றன.எனவே பஞ்சபூதங்களில் எந்த சக்தி குறைவாக உள்ளதோ அந்த  சக்தியை குறிக்கும் விரலை பெருவிரலோடு  சேர்க்கும் போது உடலில் சமச்சீர் தன்மையை உண்டாக்கும்.
உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் .
உடல் சார்ந்த மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் குணப்படுத்தி  பேரின்பத்தை அளிக்கும்.
அக்காலத்தில் இருந்தே  முத்திரைகள் பயன்படுத்துதல் பழக்கத்தில் இருந்துள்ளது. இன்றளவும் பரதநாட்டியத்திலும், வர்மக்கலைகளிலும் முத்திரைகள் பயன்படுத்துவதே அதற்கு  சான்றாகும்.

பயிற்சி மேற்கொள்வதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய
அறிவுரைகள்;

ALSO READ  புளிச்ச கீரை தொக்கு

சாப்பிட்டவுடன் பயிற்சி செய்ய கூடாது.

தரையில் அமர்ந்து செய்வது நல்லது.

நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். ஆனால் முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும்.

தொடர்ந்து பயிற்சிகள் செய்து வந்தால்  முழு பலனையும் பெறலாம்.  ( தொடரும்)

எஸ். ராஜலெக்ஷ்மி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாகன ஓட்டிகளுக்கு அதிரடி அறிவிப்பு!!!

Shanthi

விரைவில் மாதவிடாய் வரவைப்பதும்? தாமதப்படுத்துவது எப்படி?

naveen santhakumar

மறந்தும் கூட இதெல்லாம் தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்….!!!!

Shobika