லைஃப் ஸ்டைல்

வேப்பங்குச்சி விலை 500ரூபாய்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேப்பமரம் மருந்துகளின் மன்னன்னு சொல்லலாம். வேப்பம்பூவிலிருந்து குச்சிவரை எல்லாமே சிறந்த ஆயுர்வேத மருந்தாக பயன்படக்கூடியது.இது காலம் காலமாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு தான் வருகிறது. ஆனா நம்ம காதுகள்ல விழுவுரது இல்லையே!

தோல்நோய்க்கும்,உடம்புக்கும்,பற்களின் ஆரோக்கியத்துக்கும் நம்ம ஊர் ஆயாக்களின் ஒரே சாய்ஸ் வேம்பு தான். நம்ம கிராமத்தான் கிறுக்கன் இல்ல, கிரேட்டிவிட்டியான ஆளுங்கன்னு நம்மல்ல பலருக்கும் தெரியிறது கூட கிடையாது. காலைல எழுந்து போறபோக்குல வேப்பங்குச்சிய உடைச்சு 5பைசா செலவு இல்லாம பல்ல துளைக்கிட்டு அடுத்த வேலைய பார்க்கபோய்டுவான். அதுமாதிரி அடுப்புகறியை தூள் பண்ணியும், உப்பு போட்டு பல்துலக்குவதும் நம்மாளுங்களுக்கு தெரியும். ஆனா இப்ப நாம்ம அதோட அருமை தெரியாம விளம்பரங்கள பார்த்து விதவிதமான பேஸ்டுல உப்பு,பிரஸ்கள சுத்தம்ன்னு யூஸ் பண்ணிக்கிட்டு இது தான் ஆரோக்கியம்,இது தான் அழகுன்னு அதையே கடைபிடிச்சிக்கிட்டு வரோம். ஒத்த ரூபா செலவில்லாம பல் தேய்ச்சிட்டிருந்த நம்ம ஆளுங்கள காலபோக்குல மாத்திவிட்டுட்டு, அதே வேப்பங்குச்சிய நல்லா பாக்கெட் போட்டு விக்கிறான் வெளிநாட்டுகாரன்.

அமெரிக்கநாட்டு உயர்தர கடைகளில் தான் இந்த கூத்து நடக்குது. ஆறு வேப்பங்குச்சி எட்டு டாலர் அதாவது நம்ம ஊரு காசுக்கு 535ரூபாய். ஆன்லைன்களில் ஆடர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். “அடபாவிங்களான்னு நினைக்க தோனுதுல்ல, உண்மை தாங்க,அடுத்த நாட்டு காரனுக்கு தெரிஞ்ச நம்ம கிராமத்து ஆரோக்கியத்த நாம கண்டுக்கிறது கூட கிடையாது.

ALSO READ  பொங்கல் பூஜை செய்வது எப்படி?…நல்ல நேரம் எது?

மூலப்பொருட்களையே பயன்படுத்தாம இவற்றில் அதிக இயற்கை மூலப்பொருட்கள் அடங்கியிருக்குன்னு விற்க கூடிய சாமர்த்தியம் தான் விளம்பர உலகம்.எதுவுமே வெள்ளைகாரன் சொன்னா அது உண்மையா தான் இருக்கும்ல…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீடியோ கேம்ஸ் குழந்தைகளுக்கு நல்லது : 70% பெற்றோர்கள்!

Admin

சிறுத்தைக்குட்டிகள் கூட வாடகைத்தாய் மூலம் பிறக்குமா?

Admin

குளிர்காலத்திற்கு ஏற்ற “ஆப்பிள் டீ”

Admin